அசுர வேகத்தில் முப்படைகளின் உள்நாட்டு உற்பத்தி!

அசுர வேகத்தில் முப்படைகளின் உள்நாட்டு உற்பத்தி!

Share it if you like it

இலக்கை நோக்கி முப்படைகளின் உள்நாட்டு உற்பத்தி வேகம் எடுத்து வருகிறது.

இந்தியாவை சுய சார்பு நாடாக மாற்ற வேண்டும் என்கிற மிக முக்கியமான இலக்கை நோக்கி மத்திய பா.ஜ.க. அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது. அதாவது, நம் நாட்டுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் வெளிநாட்டில் இருந்து வாங்காமல் அல்லது இறக்குமதி செய்யாமல், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். இதை வலுப்படுத்தும் விதமாக, மேக் இன் இந்தியா மற்றும் ஸ்ட்ராட் அப் இந்தியா ஆகிய திட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்திருக்கிறது.

இத்திட்டங்களின் கீழ் ராணுவ உபகரணங்கள், உதிரி பாகங்கள், ராணுவ வாகனம், டேங்கர், பீரங்கி, உயர் தர ராக்கெட், மிசைல், துப்பாக்கி மற்றும் அதற்குத் தேவையான தோட்டாக்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, கடற்படை மற்றும் விமானப் படைக்குத் தேவையானவையும் உள்நாட்டிலேயே தயாரிக்கும் விதமாக பல நிறுவனங்களுக்கு ஆர்டர்களை கொடுத்து செயல்படுத்தி வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு.

இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளுக்குத் தேவையான 101 முக்கிய உபகரணங்கள் உள்நாட்டு கம்பெனிகள் மூலம் பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இதன் காரணமாக, பங்குச் சந்தையில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், பாரத் டைனமிக், மிஸ்ரா டாது, கார்டன் ரிசர்ச் மற்றும் கொச்சின் ஷிப்யார்டு, இந்துஸ்தான் ஏரோநாட்டிகள், பராஸ் டிஃபன்ஸ் போன்ற பங்குகள் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறது.

முப்படைகளின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற பல வகையான ஆர்டர்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த மத்திய பட்ஜெட்டில் ராணுவத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், பல புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும் 25% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பங்குகளை ஒன்று முதல் இரண்டு வருட காலத்துக்கு இலக்கு வைத்து வாங்கும் பட்சத்தில் நல்ல லாபம் அடைய வாய்ப்புள்ளது.


Share it if you like it