இந்தியர்கள், தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வர வேண்டும் என அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் இப்ராஹிம் பைசல் கூறியுள்ளார்.
மாலத்தீவு அதிபராக முகமது முயிசு பதவியேற்றது முதல் இந்தியாவுடனான அந்நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் அந்நாட்டு அமைச்சர்கள் 3 பேர் இந்தியா குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்தனர். இது விரிசலை மேலும் அதிகப்படுத்தியதுடன், மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் பெரும்பாலானோர் தவிர்த்து வருகின்றனர். இதனால், சுற்றுலாவையே பெரிதும் நம்பியுள்ள அந்நாட்டு பொருளாதாரத்திற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சர் இப்ராஹிம் பைசல் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: மாலத்தீவுக்கு வரலாறு உள்ளது. எங்கள் புதிய அரசு, இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது. அமைதி மற்றும் நட்புறவுடன் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த விரும்புகிறோம். எங்கள் நாட்டிற்கு வரும் இந்தியர்களை, எங்கள் மக்களும், அரசும் வரவேற்பார்கள். சுற்றுலாத்துறை அமைச்சர் என்ற முறையில், தயவு செய்து மாலத்தீவின் சுற்றுலாவில் இந்தியர்களும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். எங்களது பொருளாதாரம் சுற்றுலாவை நம்பி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நமது பாரத பிரதமரை அவமானப்படுத்திய மாலத்தீவு அதிபரையே இன்று இந்தியாவிடமே கையேந்த வைத்த பெருமை பிரதமர் மோடியைத்தான் சாரும். இந்தியாவிடம் மற்ற நாடுகள் நண்பனாக வந்தால் நல்ல நண்பனாக இந்தியா இருக்கும். இந்தியாவிடமே வாலாட்டினால் வாலும் இருக்காது தலையும் இருக்காது. இந்தியாவிடம் வாலாட்ட பிரதமராக இருப்பது மன்மோகன் சிங் இல்லை. நரேந்திர மோடி.