மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் தான் சந்தேஷ்க்காலி சம்பவம் நடந்து நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதற்குள் இன்னொரு கொடூரமான சம்பவம் அங்கு அரங்கேறி உள்ளது. உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சோப்ராவைச் சேர்ந்த ஜேசிபி என்று அழைக்கப்படும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான தஜேமுல் என்பவர் ஒரு ஆணையும் பெண்ணையும் இரக்கமில்லாமல் கடுமையாக தாக்கும் காணொளியானது சமூக வலைதளத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவர் இவ்வாறு தாக்கும்போது அதனை தடுக்காமல் சுற்றி உள்ளவர்கள் வேடிக்கை பார்க்கின்றனர். இந்த சம்பவத்திற்கு பாஜகவை சேர்ந்த தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தை முதலில் கவனித்த பாஜக மேற்கு வங்க மாநில இணைப் பொறுப்பாளர் அமித் மாலவியா, சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, “மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியின் அசிங்கமான முகம் இது. ஒரு பெண்ணை இரக்கமில்லாமல் கொடூரமாக தாக்கும் வீடியோவில் இருக்கும் நபர் தஜேமுல் (ஜேசிபி என்று அப்பகுதியில் பிரபலமானவர்) . இவர் சோப்ரா எம்எல்ஏ ஹமிதுர் ரஹ்மானின் நெருங்கிய கூட்டாளி. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடத்தும் மேற்கு வங்கத்தில் நடந்து வரும் ஷரியா நீதிமன்றங்களின் யதார்த்தத்தை புரிந்து கொண்டு இந்தியா விழித்தெழ வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சந்தேஷ்காலி இருக்கிறார். முதல்வர் மம்தா பானர்ஜி பெண்களுக்கு சாபக்கேடு என்று குறிப்பிட்டுள்ளர்.
“மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இல்லை. மம்தா பானர்ஜி இந்த அரக்கனுக்கு எதிராக செயல்படுவாரா அல்லது ஷேக் ஷாஜகானுக்கு ஆதரவாக நின்றது போல் அவரைப் பாதுகாப்பாரா?” என்று பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து மம்தா பானர்ஜியை சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மத்திய சுகாதார அமைச்சரும் பாஜக தலைவருமான ஜே.பி நட்டாவும் மேற்கு வங்கத்தில் பெண்கள் பாதுகாப்பு மோசமடைந்து வருவதாக முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்து உள்ளார். மேற்கு வங்கத்தில் இருந்து ஒரு பயங்கரமான வீடியோ வெளிச்சத்திற்கு வந்துள்ளது, இந்த சம்பவம் இறையாட்சிகளில் மட்டுமே இருக்கும் மிருகத்தனங்களை நினைவூட்டுகிறது. விஷயங்களை மோசமாக்கும் வகையில், TMC கேடர் மற்றும் எம்எல்ஏக்கள் இந்த செயலை நியாயப்படுத்துகிறார்கள்.
மேற்கு வங்கத்தின் வடக்கு தினாஜ்பூர்,சோப்ராவில் நடந்த ஒரு திகிலூட்டும் காணொளியில், “ஜேசிபி” என்று அழைக்கப்படும் தஜெமுல், ஒரு பெண்ணை கொடூரமாக தாக்குவதைக் காட்டுகிறது. கொலை மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இந்த குற்றவாளி சோப்ரா எம்எல்ஏ ஹமிதுர் ரஹ்மானுடன் நெருங்கிய தொடர்புடையவர். பெண் முதல்வர் ஆட்சியில் இதுதான் நிதர்சனம்! தங்களின் தூதுக்குழுவை இங்கு அனுப்பத் துணியுமா TMC? இவ்வாறு கோவை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியை கைது செய்ததாக மேற்கு வங்க காவல்துறையினர் சமூக வலைத்தளமான எக்ஸ் ல் பதிவிட்டுள்ளனர்.