சமீபத்தில் மேற்கு வங்கத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் மர்ம கும்பல் ஒன்று புகுந்து அங்கிருந்த சாதுக்களை மிகவும் கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்த சிசிடிவி கேமராவையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பி ஓடினர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
ஆனால் மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜி இஸ்கான், ராமகிருஷ்ண மடம், உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி மிரட்டல் விடுத்தார். இதற்கு மம்தா பானர்ஜியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.
இதுதொடர்பாக பாஜகவின் தேசிய தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ஒருங்கிணைப்பாளரான அமித் மாளவியா எக்ஸ் வலைதளத்தில், மேற்கு வங்காளத்திற்கு மம்தா பானர்ஜி செய்திருக்கும் மிக மோசமான செயல் இது.
அவர் ராமகிருஷ்ணா மிஷன், பாரத் சேவாஷ்ரம் சங்கம் மற்றும் இஸ்கான் ஆகியோரை பொது மேடையில் தவறாக விமர்சித்து பின்னர், அடியாட்களை வைத்து , துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் ஜல்பைகுரியில் உள்ள ராமகிருஷ்ணா மடத்திற்குள் நுழைந்து, துறவிகளைத் தாக்கி, சிசிடிவியை உடைத்து, சாதுக்களை வலுக்கட்டாயமாக தெருக்களில் தூக்கி எறிந்துள்ளனர். இது தாலிபான் ஆட்சிக்குக் குறைவானதல்ல. இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஆயிரக்கணக்கான சாதுக்கள் மம்தா அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பாஜகவின் தேசிய தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ஒருங்கிணைப்பாளரான அமித் மாளவியா எக்ஸ் வலைதளத்தில், மம்தா பானர்ஜி இஸ்கான், ராமகிருஷ்ணா மிஷன், பாரத் சேவாஷ்ரம் சங்கம் போன்ற மரியாதைக்குரிய இந்து அமைப்புகளை குறிவைத்து தேன் கூட்டில் கை வைத்துள்ளார். ஆயிரக்கணக்கான காவி உடை அணிந்த சாதுக்களும் அந்தந்த ஆணைகளின் பக்தர்களும் கொல்கத்தாவின் தெருக்களில் நடந்து அவரது அவதூறான கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சன்யாசிகளின் கோபம் பல திமிர்பிடித்த தலைவர்களை மூழ்கடித்துள்ளது. இதில் மம்தா பானர்ஜி விதிவிலக்கல்ல. சனாதனைக் காப்பாற்ற மேற்கு வங்கம் மம்தாவுக்கு வாக்களிக்குமா ? இவ்வாறு பதிவிட்டுள்ளார்.