மிகவும் உயர் சுருதியில், பெரும் தலைகள் எல்லாம் களமிறங்கி நடந்த தேர்தல், மேற்கு வங்கத்தில் இந்த 2021ல் நடந்த மக்களவைத் தேர்தல். மற்ற மாநிலங்களில் இருந்தும் கட்சி தொண்டர்கள் பலர் பணிசெய்ய வந்தார்கள். மாநில உளவுத்துறையே பாஜகவின் வெற்றி வாய்ப்பை கணித்திருந்தது. தேர்தலின் போது வன்முறை ஏதும் நடக்கவில்லை.
ஆனால் தேர்தலை அடுத்த இரண்டாவது தினம் பகல் 11 மணி முதல் ஒரு பதற்றநிலை உருவானது. பொருட்களை சூறையாடுதல் ஆரம்பமானது. கூடவே கண்ணில் கண்டவர்களை உதைப்பதும், வெடிபொருட்களை எறிவதும் ஆரம்பித்தன. இது ஜிஹாதிகளின் திட்டம் என்பது நன்றாகத் தெரிந்தது. அந்த நாசகாரக்கும்பல் தங்களது அராஜகச் செயல்களை 36 முதல் 48 மணி நேரத்தில் நிறைவேற்றியதை, கையாலாகாத்தனமாக போலீஸ் வெறுமே பார்த்துக் கொண்டிருந்தது.
மூன்றாம் மற்றும் நான்காம் நாட்கள் அனைவரையும் அதிரவைத்த தினங்கள்.
கிட்டத்தட்ட 3000 மக்களின் வாழ்க்கைகள் மோசமாகப் பாதிக்கப்பட்டன. வீடுகள் சூறையாடப்பட்டன சுமார் 353 கிராமங்கள் மோசமான தாக்குதலுக்கு உள்ளாயின. பலதரப்பட்ட நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. கிடைத்த தகவலின் படி 40,000 மக்கள் பாதிக்கப்பட்டனர் (18,000 SC உட்பட) பல பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்,142 கூட்டுக் கற்பழிப்புக்கள் அரங்கேறின (தெரிவிக்கப்பட்டவை மட்டுமே) 35 பேர்கள் கொலையுண்டனர்.
பர்தமானில் பாஜக பூத்தின் தலைவர் ஆஷிஷ் சத்ரபாலின் வீட்டிற்கு திரிணாமுல் காங்கிரஸ் MLA வந்தார். ஆஷிஷ் வீட்டில் இல்லை. வெளியில் வந்த அவரது தந்தையின் கை வெட்டப்பட்டது. தாய் இரு துண்டானார். சகோதரரின் கால் வெட்டப்பட்டது. இறந்தவர்களின் சடலங்களைக்கூட பலநாட்கள் தொடவிடவில்லை. SC கமிஷன் அக்குடும்பத்தினரை மருத்துவமனையில் பார்த்து அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
சாந்தி நிகேதன் பக்கம் மற்றொரு பகுதியில் 2 தாய்மார்கள் கொடுமைக்கு உள்ளாகினர். பல பெண்கள் கூட்டம் கூட்டமாக கற்பழிக்கப்பட்டனர். ஒரு பெண் சொன்னார் “நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்.பயப்பட இனி என்ன இருக்கிறது? ஆகவே போராடுவேன்” என்றார். அனசாயா என்ற பெண்மணி கற்பழிப்புக்கு பின் கொல்லப்பட்டார். காக்கமுயன்ற அவரது கணவரும் தான்.
வடக்கு பர்கானாவில் நடந்த அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. ஒன்றொன்றாக கிராமங்கள் கொளுத்தப்பட்டன. ABVP அலுவலகம் தாக்கப்பட்டது. 45 மாணவிகள் மிரட்டப்பட்டனர்.
ஹிந்து ஜாகரண் மன்ச்சின் 200 காரியஸ்தர்கள் மற்றும் 350 VHP அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டனர். பல BMC அலுவலகங்கள் கைப்பற்றப்பட்டன.
முதல்வர் தோல்வியடைந்த நந்திகிராமத்தில் எல்லாக் கடைகளும் சூறையாடப்பட்டு டிராக்டர்கள் மூலம் பொருட்கள் கொண்டுபோகப்பட்டது. எல்லாக் கடைகளும் தீ வைக்கப்பட்டன.
“நாங்களும் திரிணாமுல் காங்கிரஸ் தான்” என்று சிலர் கத்தியபோது தாக்கியவர்கள் கூறியது “ஆனால் நீங்கள் ஹிந்துக்கள்”. தாக்கப்பட்டவர்களின் அடையாள ஆதார், ரேஷன்கார்டுகள், தொழிலாளர்களின் கேட்பாஸ் அனைத்தும் பறிக்கப்பட்டன.
தெற்கு பர்கானாவில் திரிணாமுல் குண்டர்கள் பிரதீப் வைத்யாவின் தந்தைக்காக வந்தனர். அவரில்லாததால் அவரது சிறுபையனைத் தாக்கினார்கள். அவனை மருத்துவமனை செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டிலேயே மருத்துவம் செய்ய முயன்று 7 நாட்களுக்குப் பின் சிறு பையன் உயிரிழந்தான். அவனது எரியூட்டலையும் அனுமதியாமல், அக்குடும்பம் , அவனை வீட்டிலேயே எரித்தனர்., வேத முறைப்படி.
மண்டல் பிரசிடென்டு கொல்லப்பட்டார். அவர்மீது ஒரு பாஜக கொடியைப் போர்த்தி அவரது மனைவி எரியூட்டினார்.
3000 மக்கள் அஸ்ஸாமில் தஞ்சம் அடைந்தனர். அஸ்ஸாம் முதல்வர் அவர்களை வரவேற்று ஆதரவு அளித்தார்.மனித உரிமைக் கழகத்திற்கு ரிப்போர்ட் அனுப்பப்பட்டுள்ளது.
கூச்பெகாரில் ராஜவன்ஷி மக்கள் தங்களை க் காத்துக் கொள்ள ஒன்றுபட்ட தும் ஜெஹாதிகள் ஓட ஆரம்பித்தனர். போலீஸ் மற்றும் விரைவுத்தீர்வு படையும் வந்துவிடவே 4 கிராமங்கள் காப்பாற்றப்பட்டன.
ஹௌராவை ஒட்டி 500 மக்கள் ஒன்றுகூடவே ஜிஹாதி மக்கள் புறம் காட்டி ஓடினர்.
பிர்பூம் கிராமத்தில் பழங்குடி மக்கள் வில்லும் அம்பும் கொண்டு தங்களைக் காத்துக் கொண்டனர்.
நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில், போலீஸ் வராததால் தங்களைத் தாங்களே மக்கள் காத்துக் கொள்ள நேரிட்டது. உண்மை நிலையைக் கண்டறிய வந்த SC கமிஷனின் விஜய் சம்போ, ஜில்லா மாஜிஸ்திரேட்டைத்தான் குறைகூற வேண்டும் என்றார்.
ஆர்எஸ்எஸ்ஸின் நிர்வாக காரியதரிசி சம்பந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டார். தன்னார்வலர்கள் தங்களது சேவைகளை தொடர்கின்றனர். பாதிக்கப்பட்ட இடங்களை ஆளுனர் பார்வையிட்ட பின் லாக்டௌன் அறிவிக்கப்பட்டது.
(கரோனாவால் அல்ல). படித்த, பெரும்பதவிகளை வகித்த 150 மக்கள் ஆளுனரை சந்தித்து வன்முறையை அடக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
நியாய உணர்வுள்ள திரிணாமுல் மக்களும் நடந்த கொடுமைகளுக்கு வருந்துகிறார்கள்.
தன்னால் ஆட்சி செய்யப்பட்ட மாநிலத்தில் மீண்டும் தனது கட்சி ஜெயித்தாலும், தான் தோற்கடிக்கப்பட்டதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மரண தாண்டவம் ஆடி, தன் மக்களையே கொன்று குவித்து, மக்கள் சொத்துக்களைச் சூறையாடி, பெண்களைக் கற்பழித்து, மக்களைப் பதறடித்து வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கும் மமதை மிக்கவர் யாருக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்? முற்காலத்தில் இந்தியா மீது படையெடுத்து வந்த வெளிநாட்டவர்கள் செய்த அராஜகச் செயல்களை, தன் மக்களுக்கே செய்யத் துணிந்த இவர்களிடம் மீண்டும் 5 வருட ஆட்சியைக் கொடுத்திருக்கும் மக்களைக் கண்டு அழுவதா சிரிப்பதா?
ராமசுப்பிரமணியன்
வங்கி மேலாளர்(ஓய்வு)