2026-ல் தி.மு.க. ஆட்சிதான் என்று மூத்த பத்திரிகையாளர் மணி அடித்துச் சொல்லி இருப்பது உடன் பிறப்புகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
2021 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. தலைவர்கள் ஏராளமான வாக்குறுதிகளை வாரி வழங்கினர். குறிப்பாக, பெண்களை கவரும் வகையிலான வாக்குறுதிகள்தான் அதிகம். இலவச பஸ் பயணம், மாதம்தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை, உயர் கல்வி பயிலும் பெண்களுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் உதவித் தொகை, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் என் அள்ளி வீசினர். ஆனால், 1,000 ரூபாய் உரிமைத்தொகையைும் வழங்கவில்லை, கேஸ் சிலிண்டர் மானியமும் வழங்கவில்லை. மேலும், இலவச பயணம் என்று சொல்லி விட்டு, அதை கேலி கிண்டலும் செய்து வருகின்றனர்.
இது ஒருபுறம் என்றால், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவது உள்ளிட்ட வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு படுமோசமாக இருக்கிறது. தினசரி கொலை, கொள்ளை, செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அதேபோல, மதமாற்றம், பயங்கரவாத செயல்களும் அதிகரித்திருக்கிறது. பள்ளிகளிலேயே தைரியமாக மதமாற்றம் செய்யும் சம்பவங்கள் அரங்கேறி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், தி.மு.க. அரசு மீது பொதுமக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
ஆகவே, அடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வராது என்பதுதான் மக்களின் எண்ணமாக இருந்து வருகிறது. இந்த சூழலில்தான், தமிழகத்தில் அடுத்தது பா.ஜ.க. ஆட்சிதான் என்று மூத்த பத்திரிகையாளர் மணி கூறியிருக்கிறார். ஏற்கெனவே, “தமிழகத்தி்ல் பா.ஜ.க. வளர்ச்சி என்பது அளப்பரியதாக இருக்கிறது. அண்ணாமலை அரசியலில் மிகவும் ஆபத்தானவராக இருக்கிறார்” என்றெல்லாம் கூறிவந்தார் மணி. இந்த நிலையில், தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த மணி, “தமிழகத்தில் பா.ஜ.க. மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. அதற்காக, எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்று கூறுவதெல்லாம் வெறும் வார்த்தைகள்தான். அதேசமயம், 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வீட்டுக்கு அனுப்பப்பட்டால், பா.ஜ.க.தான் ஆட்சியை பிடிக்கும். ஒருவேளை அ.தி.மு.க. ஆட்சியை கைப்பற்றினால், பா.ஜ.க.வின் தலையீடு அதிகமாக இருக்கும். அந்த ஆட்சியில் பா.ஜ.க.வின் பங்களிப்பும் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.
மூத்த பத்திரிகையாளர் மணி கூறுவது தமிழக அரசியலில் அப்படியே நடந்து வருகிறது. ஆகவே, இதுவும் நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, மணியின் இந்த பேச்சு, உடன் பிறப்புகளை பீதியில் ஆழ்த்தி இருக்கிறது.