கடந்த ஆண்டு மணிப்பூரில் மைதேயி, குகி ஆகிய இரண்டு சமூக மக்களிடையே மோதல் ஆரம்பித்தது. இந்த மோதல் முடிவில் கலவரத்தில் கொண்டு வந்து விட்டது. இந்த கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.
இதனை மதக்கலவரம் என்று ஒருபுறம் வதந்தியை பரப்பி வந்தனர். இந்நிலையில் மணிப்பூர் விவகாரம் மதக்கலவரம் அல்ல இரண்டு பழங்குடியின மக்களுக்கு இடையேயான மோதல் என்று மலங்கரா சிரியன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாசெலி யோஸ் மார்த்தோமா மேத்யூஸ் கூறியுள்ளார்.
சமய சார்பின்மை என்பதே இந்தியாவின் அடையாளமாகும். இந்த சமய சார்பின்மையை பாஜக தலைமையிலான மத்திய அரசு பாதுகாக்கும் என்று கிறிஸ்துவ திருச்சபை உறுதியாக நம்புகிறது. சுரேஷ் கோபி மற்றும் ஜார்ஜ் குரியன் ஆகியோர் மத்திய அமைச்சரவையில் புதிய பொறுப்புகள் வழங்கி இருப்பது கேரள மாநிலத்தை மோடி அரசு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்பதை காட்டுகிறது. மணிப்பூரில் நடந்தது மதக்கலவரம் அல்ல இரண்டு பழங்குடியின மக்களுக்கு இடையேயான மோதல் தான் என்று கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாசெலி யோஸ் மார்த்தோமா மேத்யூஸ் கூறினார்.