தி.மு.க. கவுன்சிலர்கள் டிஷ்யூம்… டிஷ்யூம்..!

தி.மு.க. கவுன்சிலர்கள் டிஷ்யூம்… டிஷ்யூம்..!

Share it if you like it

மன்னார்குடியில் பெண் தி.மு.க. கவுன்சிலரை தகாத வார்த்தைகளால் திட்டிய தி.மு.க. கவுன்சிலர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி 11-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் பாண்டவர். 29-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் கலைவாணி. இருவருமே தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பாண்டவர், நகர தி.மு.க. செயலாளராக இருக்கும் வீரா கணேசன், நகர் மன்றத் தலைவராக இருக்கும் சோழராஜன் ஆகியோருக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், கலைவாணியின் 29-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் ருக்மணி என்ற குளத்தைத் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இப்பணியை மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, நகரச் செயலாளர் வீரா கணேசன் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பார்வையிட்டனர்.

அப்போது, கவுன்சிலர் கலைவாணி செல்லவில்லை. அவருக்கு பதிலாக, அவரது கணவர் கார்த்திக் சென்றிருக்கிறார். காரணம், கலைவாணிக்கு 3 மாத கைக்குழந்தை இருப்பதால் வர இயலவில்லை என்று கூறப்படுக்கிறது. இது தொடர்பாக கார்த்திக்குக்கும், நகரச் செயலாளர் வீரா கணேசனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், ஆய்வு முடிந்து அனைவரும் கிளம்பிச் சென்ற நிலையில், கார்த்திக்கும் வீட்டிற்கு வந்து விட்டார். இந்த சூழலில், கவுன்சிலர் பாண்டவர், கார்த்திக்குக்கு போன் செய்திருக்கிறார். கலைவாணி போனை எடுத்த நிலையில், `அவன்கிட்ட போன கொடுங்க. நகரச் செயலாளர், நகர்மன்றத் தலைவரை ஏன் திட்டினான்?’ என்று எடுத்த எடுப்பிலேயே ஒருமையில் கேட்டிருக்கிறார்.

அதற்கு கலைவாணியோ, `உங்களுக்கு மட்டும்தான் நகரச் செயலாளரா, எங்களுக்குக் கிடையாதா?’ என்று கேட்டிருக்கிறார். உடனே ஆவேசமான பாண்டவர், கலைவாணியின் கணவர் கார்த்திக்கை ஆபாசமாகத் திட்டி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கலைவாணி, `ரொம்ப தப்பா பேசுறீங்க. இந்த பதவிக்கோ, பணத்துக்கோ எல்லாரு மாதிரியும் எங்களால ஜால்ரா அடிக்க முடியாது. எம்.எல்.ஏ.வையும், மாவட்டத்தையும் பார்த்து இந்த பதவியே வேண்டாம்னு ராஜினாமா செஞ்சுடறேன்’ என்று சொல்லி இருக்கிறார். இதற்கும், மோசமான வாத்தைகளால் திட்டுகிறார் பாண்டவர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி தி.மு.க.வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, கவுன்சிலர் பாண்டவர் நேற்று மதியம் 10-க்கும் மேற்ப்பட்ட நபர்களை அழைத்துக் கொண்டு கார்த்திக் வீட்டுக்குச் சென்று, கணவன், மனைவி இருவரையும் தாக்கியதாகவும், வீட்டிலுள்ள பொருள்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே, நகரச் செயலாளரும், நகர் மன்றத் தலைவரும் கார்த்திக் வீட்டுக்குச் சென்று சமாதானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. நடந்த விவகாரம் குறித்து கலைவாணி திருவாரூர் மாவட்ட எஸ்.பி.க்கு ஆன்லைன் மூலம் புகார் அனுப்பி இருக்கிறார்.

தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. பெண் கவுன்சிலர் குடும்பத்துக்கே தி.மு.க. நிர்வாகிகளால் ஆபத்து ஏற்படும் நிலைதான் இருக்கிறது என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்கள் அப்பாவி பொதுமக்கள்.


Share it if you like it