சோதனைகளை சாதனையாக்கி சரித்திரம் படைத்த மாரியப்பன் தங்கவேலு !

சோதனைகளை சாதனையாக்கி சரித்திரம் படைத்த மாரியப்பன் தங்கவேலு !

Share it if you like it

பாராலிம்பிக்கில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு. விபத்தில் தனது கால்களை இழந்தாலும் தன்னம்பிக்கையின் மூலம் தடைகளைக் கடந்து அவர் பாராலிம்பிக்கில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும், சீற்றம் குறைவதுண்டோ என்பதற்கு ஏற்ப, மீண்டும் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் மாரியப்பன். பாரிஸ் பாராலிம்பிக்கில் 1.85 மீ. உயரம் தாண்டி வெண்கலம் வென்றார் மாரியப்பன்.

வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில்,

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த உயரம் தாண்டுதல் விளையாட்டு வீரரான மாரியப்பன் தங்கவேலு அவர்கள், பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

2016-ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம், 2020-ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் மற்றும் தற்போது வெண்கலப் பதக்கம் என்று, தொடர்ச்சியாக இந்தியாவிற்காக பதக்கம் வென்று வரக்கூடிய தங்களது இந்த உறுதியான விளையாட்டுத் திறனைக் கண்டு, தமிழகமும் பாரதமும் பெருமையடைகிறது. வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it