ஹிந்து மரபுப்படி திருமணம் செய்து கொள்ளுங்கள். மாற்று மதத்தினருடன் பழகுவது கடினம். ஆகவே, எச்சரிக்கை தேவை என்று இஸ்லாமிய அடிப்படைவாதியால் கத்தியால் குத்தப்பட்டு நீண்ட போராட்டத்துக்குப் பிறகு உயிர் பிழைத்த ஹிந்து பெண் வெளியிட்டிருக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தைச் சேர்ந்த அபூர்வ பூரணிக் என்கிற பிராமண குடும்பத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி பெண், ஆட்டோ டிரைவரான முகமது இஜாஸ் என்கிற இஸ்லாமிய அடிப்படைவாதியை காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு அபூர்வாவை முஸ்லிமாக மாறும்படி வற்புறுத்திய இஜாஸ், அவரது பெயரையும் அர்ஃபா பானு என்று மாற்றினார். மேலும், முற்றிலுமாக ஹிந்து மரபுகளை கைவிட்டுவிட்டு, பர்தா, ஹிஜாப் போன்ற ஆடைகளை அணிந்து இஸ்லாமிய மரபுகளைக் கடைப்பிடிக்கும்படி வற்புறுத்தி இருக்கிறார்.
அதோடு, ஆச்சாரமான பிராமணப் பெண்ணான அபூர்வாவை, இறைச்சி, பிரியாணி ஆகியவற்றை சாப்பிடும்படி துன்புறுத்தி கொடுமைப்படுத்தி இருக்கிறார். இவை எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார் அபூர்வா. இத்தம்பதிக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான். இந்த சூழலில்தான், இஜாஸுக்கு ஏற்கெனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கும் விவரம் அபூர்வாவுக்கு தெரியவந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அபூர்வா, இஜாஸை விட்டு பிரிந்து, தனது 2 வயது மகனுடன் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டார். மேலும், விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த இஜாஸ், கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி சைக்கிளில் சென்று கொண்டிருந்த அபூர்வாவை, விரட்டிச் சென்று கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில், முகம், கழுத்து, மார்பு, கை, கால் என 23 இடங்களில் கத்திக்குத்து காயமடைந்த அபூர்வை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அபூர்வா, சமீபத்தில்தான் நினைவு திரும்பி சகஜமான நிலைக்கு வந்திருகிறார். இவர்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில்தான் ஹிந்து மரபுப்படி திருமணம் செய்து கொள்ளுங்கள். மாற்று மதத்தினருடன் பழகுவது கடினம். ஆகவே, எச்சரிக்கை தேவை என்று சொல்லி இருக்கிறார். இதுகுறித்து அபூர்வா கூறுகையில், “நான் செய்த தவறை யாரும் செய்து விடாதீர்கள். எந்த முடிவாக இருந்தாலும், பெண்கள் தங்களது பெற்றோருடன் விவாதிக்க வேண்டும். ஹிந்து தர்மப்படியும், மரபுப்படியும் திருமணம் செய்து கொள்ளுங்கள். அதுதான் பாதுகாப்பானது. மாற்று மரபுகளுடன் பழகுவது கடினம். நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை நிலைநிறுத்தவும், பாதுகாக்கவும் விரும்பினால், நமது ஹிந்து மதத்துக்குள் திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.