பா.ஜ.க, பாரதப் பிரதமர் மோடி, மத்திய அரசு, குறித்து மிக கடுமையான விமர்சனங்களையும், சீனா, சீன அதிபர் ஜின்பிங், மற்றும் கேரள அரசிற்கும் முட்டு கொடுப்பதையே இன்று வரை வழக்கமாக கொண்டவர் சீமான் பாராட்டிய அருணன் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் பிரபல மலையாள நடிகரும், எம்.எல்.ஏ.வுமான முகேஷ், அவர்களிடம் போன் வாயிலாக உதவி கேட்ட மாணவரை சரமாரியாக திட்டிய ஆடியோ ஒன்று தற்பொழுது கடும் சர்ச்சையை அம்மாநிலத்தில் ஏற்படுத்தி உள்ளது.
முகேஷ் அவர்களிடம் மாணவர் ஒருவர் போன் செய்து உதவி கேட்டு உள்ளார். அதற்கு, ‘இந்த எண்ணை உனக்கு தந்தது யார்’ என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த மாணவன் எனது நண்பர் கொடுத்தார் என்று கூறியுள்ளார். ஆத்திரமடைந்த முகேஷ், ‘அந்த நண்பனை அடிக்க வேண்டும். உன் தொகுதி எம்.எல்.ஏ., யார்’ என கேட்க அந்த மாணவன் எனக்கு ‘தெரியாது’ என்று தெரிவித்து உள்ளார்.
கடும் கோபம் அடைந்த முகேஷ், ‘எம்.எல்.ஏ., பெயர் தெரியாத உன்னை துடைப்பத்தால் அடிக்க வேண்டும்’ என்கிறார். இந்த ஆடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உதவி கேட்ட நபரிடம் பா.ஜ.க எம்.எல்.ஏ பேசி இருந்தால். இந்நேரம் அருணன் பா.ஜ.க குறித்தும், ஆர்.எஸ்.எஸ், குறித்தும் பொங்கி இருப்பார் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.