கடவுளை தொழ ஒலிபெருக்கி எதற்கு என்று இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மௌலானா முஃப்தி நசீர் சாஹப் கூறியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
நாடு மழுவதும் இஸ்லாமியர்களின் மசூதிகளில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருக்கும். 5 நேர தொழுகையின்போதும் இந்த ஒலிபெருக்கு ஒலித்துக் கொண்டிருக்கும். இது இதர மதத்தினருக்கு இடையூறாக இருந்து வருகிறது. எனவே, மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு பிள்ளையார் சுழி போட்டது மகாராஷ்டிர மாநிலம்தான். அம்மாநில நவநிர்மான் சேனை கட்சியின் தலைவரும், முதல்வர் உத்தவ் தாக்கரேயின் உறவினருமான ராஜ் தாக்கரே, நாங்கள் எந்த மத வழிபாட்டுக்கும் எதிரி அல்ல. நாங்களும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான். ஆனால், வழிபாடுகளை வீட்டுக்களும், வழிபாட்டுத் தலங்களுக்குள்ளும்தான் வைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே, மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். அல்லது மசூதிகளின் அருகே ஒலிபெருக்கி அமைத்து ஹனுமன் சாலிசா பாடல் ஒலிபரப்பப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். மேலும், ஒலிபெருக்கிகள் அகற்றப்படாததால், மசூதிகளுக்கு அருகே ஒலிபெருக்கிகளை அமைத்து ஹனுமன் சாலிசா பாடல்களை ஒலிபரப்பவும் செய்தார். இதைத் தொடர்ந்து, மத வழிபாட்டுத் தலங்களில் அனுமதி பெற்றுத்தான் ஒலிபெருக்கிகளை வைக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், ஒலிபெருக்கி வைத்துக் கொள்வது அவரவர் விருப்பம். ஆனால், மசூதியை விட்டு சத்தம் வெளியில் வரக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார். இதற்கு இஸ்லாமியர்களும், இஸ்லாமிய மதகுருமார்களும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த சூழலில்தான், கடவுளை தொழுவதற்கு ஒலிபெருக்கி எதற்கு என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் இஸ்லாமிய மதகுரு ஒருவர். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “தொழுகை என்பது அல்லாஹ்வுக்கும் விசுவாசிகளுக்கும் இடையிலானது. இதை ஒலிபெருக்கிகளை வைத்து முழு வட்டாரத்தையும் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஒருவரின் தூக்கத்தைக் கெடுக்கும் பட்சத்தில் குரானை ஓதாமல் இருப்பது நல்லது என்று இஸ்லாம் கூறுகிறது” என்று கூறியிருக்கிறார் மௌலானா முஃப்தி நசீர் சாஹப்.
இதுகுறித்து தேச நல விரும்பிகளும், சமூக ஆர்வலர்களும் கூறுகையில், “இஸ்லாமியர்களை பொறுத்தவரை, ஒரு சாரர் இந்திய சட்டதிட்டங்களுக்கும், அரசியலமைப்புக்கும் கட்டுப்பட்டு நடக்கிறார்கள். ஆனால், சில அடிப்படைவாதிகள்தான் ஷரியத் சட்டப்படிதான் வாழ்வோம் என்று அடம் பிடிக்கிறார்கள். இவர்களால்தான் இந்தியாவில் ஆங்காங்கே பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆகவே, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
கடந்த 3 ஆண்டுகளாக பல மறைக்கப்பட்ட வரலாறுகள், சொல்லப்படாத உண்மை செய்திகள் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்ததில் மீடியான் பெருமை கொள்கிறது. இப்பணி சிறப்பாக, தரமாக தொடர உங்கள் ஆதரவு அவசியம். மீடியான் குடும்பத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கரம் சேர்ப்போம்.