ஹிந்து, முஸ்லீம், மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. தமிழகத்தில் வேலூர் இப்ராஹிம், போல் ஹிந்து, முஸ்லீம், ஒற்றுமைக்காக பலர் பணியாற்றி வருவது போல்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதரஸா ஒன்றில் குர்ஆனுடன் சேர்த்து வேதங்களையும் கற்றுத் தந்த மவுலானா பசுலூர் ரஹ்மான் ஷாஹீன் ஜமாலி அண்மையில் காலமானார். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு சான்றாக திகழ்ந்தவர்.
மீரட்டின் இமாதுல் இஸ்லாம் மதரஸாவில் முதல்வராக இருந்தவர் தன் மாணவர்களுக்கு குர்ஆனுடன், வேதங்களையும், கற்பித்து வந்தார். இந்துக்களின் நான்கு வேதங்களிலும் ஆழ்ந்த அறிவு பெற்றவர். இரு மதங்களுக்கு இடையிலான கருத்து வேற்றுமைகளை களைய மிக தீவிரமாக களப்பணியாற்றிவர். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு முன் உதாரணமாக திகழ்ந்தவர்.
தனது கல்வி புலமையின் மூலம் உ.பிவாசிகளால் ‘சத்துர்வேதி’ எனவும், ‘பண்டிட்’ எனவும் அன்புடன் அழைக்கப்பட்டவர். அனைத்து மதத்தினராலும் மவுலானா மிகவும் மதிக்கப்பட்டார். நாடு முழுவதிலும் நடைபெறும் மதநல்லிணக்க மாநாடுகளிலும் மவுலானா ஜமாலி தவறாமல் பங்கேற்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.