சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வைகோ பேச முற்படுகையில் மின்வெட்டு ஏற்பட்ட சம்பவத்தால் அவர் கடுப்பான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனராக இருப்பவர் வைகோ. இவர், சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், என பன்முகத்தன்மை கொண்டவர். தமிழகத்தில், உள்ள மிக மூத்த அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர். தி.மு.க.வின் குடும்ப அரசியலை எதிர்த்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியவர். இதனை தொடர்ந்து, தி.மு.க.வின் குடும்ப அரசியலுக்கு எதிராக மிக தீவிரமாக செயல்பட்டவர்.
இதனிடையே, வைகோவின் முதுமை காரணமாகவும் கரை ஒதுங்கி நிற்கும் ம.தி.மு.க.விற்கு புத்துயிர் அளிக்கும் விதமாக, கடந்த 2021 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார். அந்த வகையில், ம.தி.மு.க. நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. அதுவும் உதயசூரியன் சின்னத்தில் என்பது தான் கொடுமையிலும் கொடுமை.
வைகோவின், குடும்ப அரசியல் பிடிக்காமல் பலர் அந்த கட்சியை விட்டே ஓட்டம் எடுத்து வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க, துரை வைகோவின் ஆணவபோக்கு கட்சியின் முன்னோடிகளின் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படியாக, அந்த கட்சியின் செயல்பாடுகள் இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ம.தி.மு.க. தலைவர் வைகோவின் தலைமையில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்று இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டம் ஹிந்தி மொழிக்கு எதிராக நடைபெற்றது. இதையடுத்து, வைகோ பேச முற்படுகையில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால், கடுப்பான வைகோ மைக் இல்லாமல் தொண்டர்கள் மத்தியில் பேச முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.