வைரவியாபாரியான மெஹுல் சோக்ஸி 14,000 கோடி வங்கி பண மோசடி விவகாரத்தில் சிக்கி கரிபியன் தீவுகளில் ஒன்றான ஆண்டிகுவா தீவுக்கு தப்பி சென்றார் அவரை நாடுகடத்த இந்திய கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியால் பதட்டம் அடைந்த அவர் அங்கிருந்து கியூபாவிற்கு தப்பி செல்ல முடிவெடுத்தார். பின்னர் அங்கிருந்து தப்பி செல்லும் வழியில் டொமினிக்கா பகுதியில் போலீசாரிடம் சிக்கினார் இத்தகவல் அறிந்த ஆண்டிகுவா பிரதமர் அவரை அங்கிருந்து அப்பிடியே இந்தியாவிற்கு நாடு கடத்துமாறு கூறினார் ஆனால் இதில் பல சட்ட சிக்கல் உள்ளதால் நடவடிக்கையில் சற்று தொய்வு ஏற்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நமது வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மெஹுல் சோக்ஸியை இந்தியா கொண்டு வருவதற்கான அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுக்கொண்டு வருகிறது. கூடிய விரைவில் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க ஆண்டிகுவா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்