பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசிய அமைச்சர்!

பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசிய அமைச்சர்!

Share it if you like it

பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு. இது குறித்து பத்திரிக்கையாளர்கள் சங்கம் வாய் திறக்குமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பத்திரிக்கையாளர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் தொடர்ந்து அவர்களை இழிவுப்படுத்தும் நோக்கில் தி.மு.க.வை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் நடந்து கொள்ளும் விதம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில், தி.மு.க-வின் மூத்த தலைவரும் ராஜ்ய சபா எம்பியாக இருந்த ஆர்.எஸ். பாரதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டு மொத்த ஊடகத்தையும் ரெட் லைட் மீடியா என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து, தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பத்தரிக்கையாளரை பார்த்து கிறுக்கு தனமான கேள்வி கேக்காதே என்று திட்டினார். இதையடுத்து, பால்வளத்துறை அமைச்சர் நாசர் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசியிருந்தார்.

அதேபோல, நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பத்திரிக்கையாளர்களிடம் கோவமாக நடந்து கொண்டார். இதுதவிர, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பத்திரிக்கையாளரை ஒருமையில் விமர்சனம் செய்து இருந்தார். இப்படியாக, தி.மு.க.வை சேர்ந்த எம்பிகள், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பத்திரிக்கையாளர்களுக்கு உரிய மரியாதையை வழங்காமல் தொடர்ந்து இழிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது அமைச்சர் கூறியதாவது; பிரஸ் இரண்டு வகை ஒன்னு அவன் ஸ்டில் போட்டோகிராபர், டி.வியில் ஒரு இடம் தனக்கு இருக்க வேண்டும் என நினைப்பான். இன்னொன்னு ரிப்போர்டிங் பண்ணுவது என இன்னொரு இடம் நிற்பான். அவனுக்கு வேறு ஒரு இடம் தரவேண்டும், இவனுக்கு வேற ஒரு இடம் தர வேண்டும். ரிப்போர்டிங்-க்கு பண்றவனை எங்க வேணாலும் உட்கார வைக்கலாம். சைடில் கூட உட்கார வைக்கலாம். ஆனால், இந்த கேமரா வைத்து இருப்பவன் மட்டும் ஆங்கிள் பார்ப்பான். இந்த ஆங்கிளில் தான் தர வேண்டும் என சொல்வான் என இக்காணொளியில் பேசியுள்ளார். பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து அவன், இவன் என அமைச்சர் .எ.வ.வேலு ஒருமையில் பேசியிருப்பது குறித்து பத்திரிக்கையாளர்கள் சங்கம் வாய் திறக்குமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதன் லிங்க் இதோ.


Share it if you like it