நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சி தொடங்கி கட்சி கொடியையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். விஜய் அவர்கள் கட்சியை ஆரம்பித்திலிருந்தே பல சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் ஆரம்பித்து வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் பல எதிர்ப்புகளை தாண்டி நேற்று விஜய் அவர்களின் கோட் படம் திரை அரங்கில் வெளியானது. இருப்பினும் த.வெ.க சார்பாக மாநாடு நடத்த அனுமதி கிடைக்காமல் திணறி கொண்டிருக்கின்றனர். இதுதொடர்பாக செய்தியாளர் பாஜக நிர்வாகி தமிழிசையிடம் கேள்வி எழுப்ப, அதற்கு அவர், தமிழகத்தில் கார் ரேஸ் நடத்துவதற்கு அனுமதி உடனே கிடைத்து விடுகிறது. ஆனால் விஜய் அவர்களின் மாநாட்டுக்கு அனுமதி தர தாமதமாகிறது ஏன் ? விஜய் அவர்களை பார்த்து திமுக பயப்படுகிறதா ? என கேள்வி எழுப்பினார். மேலும் விஜயின் கட்சிக்கு மட்டும் அல்லாமல் அவருடைய காட்சிக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு பேசியிருந்தார்.
இந்த நிலையில் தமிழிசை பேசியதை குறித்து செய்தியாளர் அமைச்சர் கே.என்.நேருவிடம் கேள்வி எழுப்பியதற்கு, தமிழிசை அவர்களை ஒருமையில் திமிராக பேசியுள்ளார் கே.என்.நேரு. இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக, தமிழக பாஜக திமுக அமைச்சர் நேருவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு மூத்த பெண் தலைவர் என்றும் பாராமல் அவரை ஒருமையில் பேசியதற்கு அமைச்சர் கே.என். நேரு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இதுதான் உங்கள் ஆட்சி மற்றும் கட்சித் தலைமையின் லட்சணமா ? என்று தமிழக பாஜக தரப்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.