போதை பழக்கம் வேண்டாம்: மத்திய அமைச்சர் சொன்ன உருக்கமான அறிவுரை!

போதை பழக்கம் வேண்டாம்: மத்திய அமைச்சர் சொன்ன உருக்கமான அறிவுரை!

Share it if you like it

போதை பழக்கம் வேண்டாம் என தாம் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் உருக்கமான வேண்டுக்கோளை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கவுஷல் கிஷோர். இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு லம்புவா சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற போதை மற்றும் குடிப்பழக்கத்துக்கு எதிரான கூட்டத்தில் கலந்து கொண்டார். இதையடுத்து, அவர் பேசும் போது, “என் மகனுக்கு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதையடுத்து, நான் அவனை போதை ஒழிப்பு மையத்தில் சேர்த்து விட்டேன். எனது, மகன் திருந்தி விடுவான் என்று நம்பினேன். அந்த தீய பழக்கத்தை விட்டுவிடுவான் என்று நாங்கள் நினைத்தோம். ஆறு மாதங்கள் கழித்து அவன் திருமணம் செய்து கொண்டான். ஆனால், அவன் மீண்டும் குடிக்கத் தொடங்கினான். இறுதியில், அவனின் மரணத்துக்கு அதுவே வழிவகுத்து விட்டது. இரண்டாண்டுகளுக்கு முன்பு அவன் இறந்தபோது, எனது பேரனுக்கு இரண்டு வயது.

என்னால் என் மகனைக் காப்பாற்ற முடியவில்லை. என் மருமகள் விதவையானாள். எம்.பி-யாக நானும், எம்.எல்.ஏ-வாக என் மனைவியும் இருந்தபோதும் என் மகனின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. ஆகவே, இதுபோன்ற தீய பழக்கத்திலிருந்து உங்களின் மகள்கள், சகோதரிகளை நீங்கள் காப்பாற்ற வேண்டும். குடிகாரனின் ஆயுட்காலம் மிகவும் குறைவு. குடிகார அதிகாரியை விட ஒரு கூலித் தொழிலாளி சிறந்த மணமகன் என்பதை நிச்சயம் நிரூபிப்பார்” என்று தனது அறிவுரையை வழங்கியுள்ளார்.


Share it if you like it