தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற நாளில் இருந்து இச்சமயம் வரை. அமைச்சர்கள் முதல்வரை ஒரு பொருட்டாக மதிக்காமல். தங்கள் மனம் போக்கிலேயே இன்று வரை செயல்பட்டு கொண்டு வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.
இந்நிலையில்., ஊரக தொழில்துறை அமைச்சர் தாமோ. அன்பரசன். தூய்மை பணியாளர்களுக்கு. நிவாரண பொருட்களை வழங்க, நிகழ்ச்சி ஒன்றிற்கு வருகை தந்திருந்தார். அங்கு வந்த அமைச்சரிடம், என் இல்லத்திற்கு மின் இணைப்பு வேண்டும் என்று. பெண்மணி ஒருவர் மனு ஒன்றினை கொடுத்து. உருக்கமாக அமைச்சரிடம் கூறியுள்ளார். இதற்கு தாமோ. அன்பரசன் நக்கலாக பதில் அளித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
மின் இணைப்பு கேட்டு காலில் விழுந்த பெண்ணை அலட்சியம் செய்த அமைச்சர் த.மோ.அன்பரசன்#விடியல் pic.twitter.com/TTuZd1dGct
— பித்தன் (@agricultural78) May 23, 2021
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான ஆலோசனை கூட்டதை, திருச்சி திமுக அலுவலகத்தில் வைத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய பொழுது எடுத்த புகைப்படம். இதில் திருச்சி கலெக்டர் திவ்யதர்ஷினி, மாநகராட்சி கமிஷனர் சுப்பிரமணியன், திருச்சி போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் உணவுத்துறை அமைச்சருமான அரா. சக்கரபாணி உயர் பதவியில் உள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளை தனது கட்சி அலுவலகத்திற்கு அழைத்து அமரவைத்து கூட்டம் நடத்திய பொழுது எடுத்த புகைப்படம்.