பொதுவாக திமுக கட்சி என்றாலே ஆபாசமாக பேசுவதுதான். திமுக என்றால் ஆபாசம் ஆபாசம் என்றால் திமுக என்றே சொல்லலாம். திமுகவில் உள்ள நிர்வாகிகள் தரக்குறைவான கருத்துக்களை கூறி சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனை முதல்வர் ஸ்டாலினே ஒரு மேடையில் சொல்லும்போது, கழகத்தில் உள்ள நிர்வாகிகள் எந்த பிரச்சனையும் கொண்டு வரக்கூடாது என்று நினைத்து தான் தினமும் காலையில் கண்விழிக்கிறேன் என்று பேசிய காணொளி சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் டிரெண்டிங் ஆனது. ஆக திமுக நிர்வாகிகளின் லட்சணம் என்னவென்று ஸ்டாலினுக்கே தெரிந்து உள்ளது. நாங்கள் மட்டும் என்ன சளைத்தவர்களா என்று கம்யூனிஸ்ட்டும் ஆபாசமாக பேச ஆரம்பித்துள்ளனர்.
நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடரில் நேற்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மதுரை எம்பி சு.வெங்கடேசன், உரையாற்றினார். அதில் தமிழர்களின் பெருமையான செங்கோலை அருவருக்கத்தக்க வகையில் மிகவும் இழிவாக பேசியுள்ளார். அந்த உரையில்,
செத்துப் போன சிங்கத்தின் தோலை போர்த்திக் கொண்டு காட்டுக்கு ராஜா நான் தான் என்று நீங்கள் கதையடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரியுமா? இந்த செங்கோலை வைத்திருந்த ஒவ்வொரு மன்னனும் தனது அந்தப்புரத்திலே எத்தனை பெண்களை அடிமையாக வைத்திருந்தான் என்று?
இந்த செங்கோலை கொண்டு வந்து இந்த இடத்திலே வைத்ததன் மூலம் இந்த நாட்டுப் பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? வேதனையாக இருக்கிறது. இந்த இடத்திலே நாங்கள் மீண்டும் பதிவு செய்ய விரும்புகின்றோம். நாடாளுமன்றத்தினுடைய நுழைவு வாசலில் தேசத்தந்தை காந்தியின் சிலை இருந்தது. நாடாளுமன்றத்தின் முன்புறம் அண்ணல் அம்பேத்கரின் சிலை இருந்தது. இன்றைக்கு அவைகளெல்லாம் காணவில்லை. நாடாளுமன்றத்தின் பின்புற வாசலிலே காந்தியைக் கொண்டு போய் வைத்திருக்கிறீர்கள். அம்பேத்கரைக் கொண்டு போய் வைத்திருக்கிறீர்கள்.ஆனால் சாணக்கியரையும், சாவர்க்கரையும் செங்கோலையும் நாடாளுமன்றத்திற்குள்ளே வைத்திருக்கிறீர்கள்.
ஆளுங்கட்சிக்காரர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்வோம். நாங்கள் அரசியல் சாசனத்தை கையிலே ஏந்தியபடி பதவி ஏற்றுக்கொண்டோம். ஏன் தெரியுமா? உங்களால் எது அழிக்கப்பட இருக்கிறதோ அதை உயர்த்திப்பிடிக்கத் தான் மக்கள் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். நீங்கள் எதை அழிக்க நினைக்கிறீர்களோ நாங்கள் அதை உயர்த்திப் பிடிப்போம்.
அதேபோல செங்கோல் இரண்டு செய்தியின் குறியீடு. ஒன்று மன்னராட்சியின் குறியீடு. அதேபோல இரண்டாவது குறியீடு அறம் . நேர்மையின் குறியீடு. உங்களுக்கும் நேர்மைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. தமிழ்நாட்டு தேர்தலுக்கு எட்டு முறை பிரதமர் வந்தார். தமிழ்நாட்டின் பெருமையை , தமிழ்மொழியின் பெருமையை , தமிழ்பண்பாட்டின் பெருமையைப் பேசினார்.
தேர்தல் முடிந்தது உத்தரப் பிரதேசத்திலே போய் தமிழர்களைப் பற்றி நீங்கள் என்ன பேசினீர்கள் ? பீகாரிலே என்ன பேசினீர்கள் ? ஒரிசாவிலே என்ன பேசினீர்கள் ? உங்களுக்கு அந்த அரசியல் அறமும் , நேர்மையையும் இருந்திருந்தால் நீங்கள் அதைத் தமிழ்நாட்டில் பேசியிருக்க வேண்டும். எந்த ஆட்சியாளரும் இவ்வளவு இழிவாகத் தமிழர்களை பேசியதில்லை.
அதேபோல சிறுபான்மை மக்களை ஊடுருவல்காரர்கள் என்று , அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கிறவர்கள் என்று செல்வத்தை அபகரிக்கிறவர்கள் என்று நீங்கள் பேசுகிறீர்கள் . தொடர்ந்து இதையெல்லாம் தேர்தல் ஆணையம் பார்த்துக் கொண்டிருந்தது.
அதேபோல பல இடங்களிலே எழுத்தாளர் அருந்ததிராய் துவங்கி அரவிந்த் கெஜ்ரிவால் வரை அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவை நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு பேசினார்.
தமிழர்களின் கலாச்சாரத்தையும், தமிழ் பெண்களின் மானத்தையும் கீழ்த்தரமாக விமர்சித்து பேசிய மதுரை எம்பி சு.வெங்கடேசன் உரைக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மதுரை எம்பி சு.வெங்கடேசன் நாடாளுமன்ற உரைக்கு கோவை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
குடி உயரக் கோல் உயரும்; கோல் உயரக் கோன் உயர்வான்” என்பதற்கிணங்க, தர்மத்தை நிலைநாட்டும் செங்கோலை தங்கள் அதிகாரச்சின்னமாக கொண்டு ஆண்டனர் நமது தமிழ் மன்னர்கள்.
பார் போற்றும் செங்கோலைக் கொண்ட நமது மன்னர்கள், அந்தப்புரத்தில் பெண் அடிமைத்தனத்தை கோலோச்சினார்கள் என ஒட்டுமொத்த தமிழ் கலாச்சாரத்தின் மீதும் சேற்றை வாரி இறைத்துள்ளீர்கள் சு.வெங்கடேசன்.
நமது தமிழ் மன்னர்களின் பெருமைகளையும், தமிழ் பெண்களின் மானத்தையும் ஒருசேர கழுவில் ஏற்றி காவு கொடுக்க முயற்சி செய்யும் உங்கள் தமிழ்ப்பற்று புல்லரிக்க வைக்கிறது.
எப்பொழுதும் போல் இதையும் கண்டும் காணாமல் கடந்து செல்லும் உங்கள் கூட்டணிக் கட்சியின் பெண்ணியப் போராளி திமுக அமைச்சர் கனிமொழி அவர்களின் போக்கு உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது. உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக நமது பெருமைமிகு தமிழ் வரலாற்றை எவ்வளவு கீழ்த்தரமாக கேவலப்படுத்தவும் நீங்கள் தயங்கமாட்டீர்கள் என்பதற்கு இது மற்றொரு சான்று. இவ்வாறு வானதி சீனிவாசன் அவ்ருடைய எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.