சமீபத்தில் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னணி தமிழ் நாளிதழ்களுக்கு அளித்துள்ள விளம்பரத்தில், இந்திய தேசிய கொடிக்கு பதிலாக சீனாவின் கொடியை பயன்படுத்தியுள்ள நிகழ்வானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மற்றொரு சம்பவத்தை செய்துள்ளனர் திமுக உபிகள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு சோழிங்கநல்லுர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் திமுக இளைஞர் அணி சார்பில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் “pride of Tamilnadu” என்பதற்கு பதிலாக “Bride of Tamilnadu” என்று போட்டுள்ளனர். அதாவது “மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் பெருமை” என்பதற்கு பதிலாக, மு.க.ஸ்டாலின் “தமிழ்நாட்டின் மணமகள்” என்று போட்டு அனைத்து சுவர்களிலும் ஒட்டியுள்ளனர். ‘தமிழ்நாட்டின் மணமகள்’ போஸ்டரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். தி.மு.க. உறுப்பினர்களின் இந்த செயலானது அக்கட்சியை மிகுந்த தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.