Share it if you like it
திமுக தங்களுடைய கட்சி மதசார்பற்றது என்று தேர்தல் சமயத்தில் பல இடத்தில் பிரச்சாரம் செய்யும் பொழுது கூறியிருந்தார்கள். ஆனால் தற்போது திமுக தன் குணத்தை வெளிப்படுத்தி வருவதாக திமுகவுக்கு ஓட்டு போட்ட ஹிந்து மக்கள் மனக்கசப்பான கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
அதில் குறிப்பாக கடந்த மாதம் இஸ்லாமியர்கள் பண்டிகையான பக்ரீத் அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் ஹிந்துக்கள் பண்டிகையான கிருஷ்ண ஜெயந்திக்கு 30-08-2021 (திங்கட்கிழமை) ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது தெரிவிக்காமல் இருப்பதை பார்த்து, இது தான் மதச்சார்பற்ற ஆட்சியா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எழுப்பி வருகின்றனர்
Share it if you like it