மத்திய அரசின் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தின் (பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா) மூலம் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் 200 ரூபாயாக இருந்ததை தற்போது 300 ரூபாயாக உயர்த்தி உள்ளதாக மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டமானது பிரதமர் மோடி கடந்த மே 1, 2016 அன்று வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்காக உத்திரபிரதேசத்தில் தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு சிலிண்டர் விலையை 300 ரூபாயாக குறைத்தநிலையில் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு தான் அளித்த தேர்தல் வாக்குறுதியான சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு இன்னும் நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ளது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆதகங்களை தெரிவித்துள்ளனர்.