தேசிய எல்லை பாதுகாப்பிற்கு முன்னுரிமை
ஒரு நாட்டின் தன்மானத்தை பாதுகாக்கவும் வீரத்தினை எடுத்துகாட்டவும் நாட்டின் பாதுகாப்பு வேலியாக இருப்பது அந்த நாட்டின் ராணுவம் தான். அப்படிப்பட்ட ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்து, அவர்களை ஊக்கப்படுத்தி, உத்வேகமாக நடக்கச் செய்து, அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கிய அரசு நரேந்திர மோடி அரசு தான்.
இந்தியாவிடம் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிய சீனாவும், பாகிஸ்தானையும் நமது இந்திய ராணுவத்தின் மூலம் அவர்களின் வாலை ஒட்ட நறுக்கி மூலையில் முடிக்கி வைத்த நமது ராணுவ வீரர்கள். அவர்களை சுதந்திரமாகவும், துணிச்சலாகவும் செயல்பட வைத்த அரசு நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அரசு.
1. 2015 ஆம் ஆண்டு ஜுன் 4 ஆம் தேதி மணிப்பூரில் உள்ள சண்டேலா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் திடீரென்று தாக்குதல் நடத்தி இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் இறந்தனர். அதே ஆண்டான 2015 ஜுன் 9ஆம் தேதி மியான்மர் எல்லை பகுதியை தாக்கி சுமார் 118 மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை கொன்றது இந்திய ராணுவம்.
2. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உறி என்ற பகுதியில் அதிகாலை 5.30 மணிக்கு இந்திய ராணுவ கூடாரங்களில் நுழைந்த 4 தீவிரவாதிகள் 3 நிமிடத்தில் தாக்கி 19 இந்திய ராணுவ வீரர்களைக் கொன்றனர். இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா அதே ஆண்டு அதே மாதத்தில் 28ஆம் தேதி பாகிஸ்தான் கட்டுப்பாடு பகுதிக்கே போய் தாக்கி 150 தீவிரவாதிகள் மற்றும் 2 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றது.
3. 2017ஆம் ஆண்டு ஜுன் 16ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை சிக்கீம், பூட்டான் எல்லையான டோக்குவாம் என்ற இடத்தில் சீன ராணுவத்தை நம் எல்லைக்குள் வர விடாமல் சுமார் 72 நாட்கள் போராடி அவர்களை ஓட ஓட விரட்டியடித்தனர்.
4. 2018ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி ஈரான் மீது பொருளாதார தடை அமெரிக்க விதித்தது. ஆனால் நாம் அமெரிக்காவை மீறி ஈரானுக்கு 12 லட்சம் குரூடு ஆயில் ஆர்டரைக் கொடுத்து நம் இந்தியா அமெரிக்காவின் கட்டளைக்கு அடிபணியாத நிலையை ஏற்படுத்தியது.
5. 2019ஆம் பிப்ரவரி 14ஆம் தேதி புல்வாமா தாக்குதல்
ஜெய் ஷி முகமது இயக்கத்தின் தீவிரவாதி தற்கொலைப் படையாக மாறி புல்வாமாவில் நம் ராணுவ வீரர்கள் (CRP) 44 பேரைக் கொன்றனர். 12 நாட்களுக்குப் பிறகு பிப்ரவரி 26 அதிகாலை 3.30 மணிக்கு பாகிஸ்தான் எல்லைக்கோடு பகுதி அதற்கு அப்பால் உள்ள 3 இலக்குகளை தாக்கியது நமது விமானப் படை. 21 நிமிடத்தில் தாக்குதல் இருந்தாகவும் 12 மிராஜ் 2000 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டது. டாசால்ட் நிறுவனத்தில் வாங்கப்பட்ட இந்த விமானம் 100 கிலோ லேசர் கெய்டர் வெடிப் பொருட்கள் வீசப்படும் ஆற்றல் கொண்டது. இந்த 12 விமானங்கள் குவாலியர் ஏர்வேசியிலிருந்து புறப்பட்டு இத்தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த விமானத்திற்கு நடுவானில் எரிபொருள் நிரப்ப யுனிஷல் என்ற விமானம் ஆக்ராவிலிருந்து கொண்டுவரப்பட்டது.
பாகிஸ்தானின் 3 இடங்களில் துள்ளிய தாக்குதல்
1. பாகிஸ்தான் ஆக்ரமிப்பிலுள்ள காஷ்மீரின் சிக்கோடி
2. முசாகராபாட்,
3. பாகிஸ்தானுக்குள்ளேயே இருக்கக்கூடிய கைபர் பக்குங்கா மாவட்டத்திலுள்ள பாலகோட் ஆகிய இடத்தில் தாக்குதல் நடைபெற்றது.
அடர்ந்த காட்டுப் பகுதியான பாலகோட்டின் மலை உச்சியின் ஆறு இலக்குகள் மீது 90 விநாடி தாக்குதலில் சுமார் 300க்கு மேற்பட்ட ஜெய் ஷி முகமது இயக்க பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு தலைமை பொறுப்பில் இருந்த யுசுப் ஆசார் இத்தாக்குதலில் கொல்லப்பட்டான். 1971ல் பாகிஸ்தான் போருக்குப் பிறகு கட்டுப்பாட்டு எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்குள்ளேயே போய் தாக்குதல் செய்தது இதுவே முதல் முறையாகும்.
6. கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்கு சீனாவிற்கு பெரும் சேதத்தை விளைவித்தது. 2020ஆம் ஆண்டு ஜுன் 15ஆம் தேதி சீனாவிற்கும், இந்தியாவிற்கும் கைகலப்பு ஏற்பட்டு சண்டை மூண்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் மூன்று பேர் இறந்தனர். 17 பேர் காயம் அடைந்தனர். இந்த சண்டையில் துப்பாக்கி பயன்படுத்தவில்லை. ஆனால் கற்கள் கம்பிகள் தான் பயன்படுத்தினர். சீன வீரர்கள் 45 பேர் இறந்ததாக (AN) செய்தி தொடர்பு உளவுத்துறை மூலம் செய்தியை வெளியிட்டது. 35 வீரர்கள் இறந்ததாக அமெரிக்கா செய்தி வெளியிட்டது.
7. முப்படைக்கும் வெவ்வேறு தளபதி இருந்தனர். இந்த மூன்று பேரையும் ஒரே கட்டுபாட்டில் கொண்டுவர இவர்களுக்கு மேல் ஒரு தளபதி கொண்டுவரப்பட்டார். இதை சிறப்புடன் செய்தது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.
8. ரபேல் விமானம்
இந்த திட்டம் காங்கிரஸ் அரசால் போடப்பட்ட திட்டமாகும். ஆனால் இதனை செயல்படுத்தவில்லை. மோடிதான் இதனை செயல்படுத்தி ரபேல் விமானங்களை வாங்கி இந்திய ராணுவத்திற்கு வழங்கினார். இந்த நல்ல திட்டத்தினை செயல்படுத்திய மோடி மீது சில அரசியல் கட்சிகள் இதில் ஊழல் செய்ததாக கூறி வழக்கு பதிவு செய்தனர். உச்ச நீதிமன்றம் முழுமையாக விசாரித்து இதில் ஊழல் நடைபெறவில்லை என்று தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பு கயவர்களுக்கு பெருத்த அவமானமாகும்.
நம் நாட்டிற்காகவும், மக்களுக்காவும் வெயில், மழை, பனி என்று பாராமல் நாட்டின் பாதுகாப்பில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்கு பல திட்டங்களை ஏற்படுத்தினார். அவர்களுக்கு ஊதிய உயர்வு, ஓய்வு ஊதிய உயர்வு, கல்வி உதவித் தொகை, வேலை வாய்ப்பு போன்றவற்றையும் அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தார். ராணுவத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் தரமானதாகவும், புதுமையானதாகவும் வழங்கினார்.
இவ்வாறாக நாட்டிற்காகவும், நாட்டு மக்கள் பாதுகாப்பிற்கும், தன்மானத்திற்கும் அயராது உழைப்பவர் பாரத தாயின் தவப்புதல்வர் நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.