மகாகவி பாரதியார் பிறந்த நாளான டிசம்பர் 11 – ஆம் தேதியை, இந்திய_மொழி_தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என UGC பல்கலைக்கழகத்திற்கு அதிரடி உத்தரவினை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாரதப் பிரதமர் மோடி, தமிழ் மொழி மீதும் தமிழர்கள் மீதும் மாறா அன்பும், பாசமும் கொண்டவர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, ’ஏர் முனையில் தொடங்கி போர்முனை’ வரை, கண்டம் விட்டு கண்டம் சென்றாலும் தமிழ் மொழியின் மேன்மைகள் குறித்து பேசுவதை தனது கொள்கையாக கொண்டவர். அந்த வகையில், மனதின் குரல் (மன்கீ பாத்) எனும் நிகழ்ச்சியின் மூலம் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்நிகழ்ச்சியில், தேசத்திற்கும், சமூகத்திற்கும் தங்களால் இயன்ற சேவைகளை செய்து வரும் தமிழர்களை அடையாளம் கண்டு உலகம் அறிய செய்து வருகிறார். இதுதவிர, தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, தொன்மை, உள்ளிட்டவற்றை மன்கீ பாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு வருகிறார்.
இதனிடையே, இளநீர் வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் சிறு வருவாயை சேர்த்து ரூ .1 லட்சத்தை அரசு பள்ளிக்கு நன்கொடையாக அளித்த உடுமலையை சேர்ந்த தாயம்மாளின் சேவையை மன் கீ பாத் நிகழ்ச்சியில் சுட்டி காட்டி இருந்தார். அதே போல, வாஞ்சிநாதனின் தியாகத்தை வெகுவாக பாராட்டி இருந்தார். இப்படியாக, தமிழுக்கும், தமிழர்களுக்கும் பாரதப் பிரதமர் மோடி தொடர்ந்து பெருமை சேர்த்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில், மகாகவி பாரதியாருக்கு மீண்டும் பெருமை சேர்த்துள்ளது மத்திய அரசு. அதாவது, பாரதியாரின் பிறந்த நாளான டிசம்பர் 11 – ஆம் தேதியை இந்திய மொழி தினமாக கடைபிடிக்க வேண்டும் என UGC பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.