பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (PMGKY) 2016 இல் இரண்டு முக்கிய நோக்கங்களுடன் பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்பட்டது. கறுப்புப் பணத்தைத் தடுப்பது மற்றும் வருமான சமத்துவத்தைத் தொடங்குவது. முதல் குறிக்கோளை அடைய, PMGKY வரி ஏய்ப்பாளர்கள் தங்கள் கணக்கில் காட்டப்படாத சொத்துக்களை எந்த அபராதமும் அல்லது வழக்கையும் சந்திக்காமல் வெளிப்படுத்த ஒரு முறை வாய்ப்பை வழங்கியது. வெளிப்படுத்தப்பட்ட தொகைக்கு அரசாங்கம் 49.9% வரி விதிக்கும். கொரோனா தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் வகையில் PMGKY 2020 இல் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் இலவச உணவு தானிய விநியோத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவிட்டது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு. இதன் மூலம் மத்திய அரசால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 80 கோடி பயனாளிகளுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.