ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) முன்னாள் மாணவர் தலைவர் ஷீலா ரஷீத் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், இன்றைய நிலைக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். காஷ்மீர் ஒன்றும் காசா அல்ல என்பது தெளிவாகிவிட்டது, ஏனென்றால் 2010 களில் இருந்த நிலை இப்போது இல்லை. போராட்டம், பயங்கரவாதிகள் ஊடுருவல், கிளர்ச்சி ஆகியவற்றை தற்போதைய மோடி அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் ரத்தம் சிந்தாத அரசியல் தீர்வை கண்டுள்ளனர். இவ்வாறு கூறினார். மத்திய அரசுக்கு எதிராக பேசி வந்த (ஜேஎன்யு) முன்னாள் மாணவர் தலைவர் ஷீலா ரஷீத் பிரதமர் மோடி அரசுக்கு காஷ்மீர் விவகாரத்திற்காக புகழாரம் சூட்டியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக, ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு-காஷ்மீரின் தன்னாட்சி அந்தஸ்தை ரத்து செய்யும் மோடி அரசாங்கத்தின் முடிவையும், அதைத் தொடர்ந்து இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதையும் கடுமையாக ஷீலா ரஷீத், விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.