அமெரிக்க எழுத்தாளர் கருத்து கணிப்பில் மோடிக்கு அமோக ஆதரவு!

அமெரிக்க எழுத்தாளர் கருத்து கணிப்பில் மோடிக்கு அமோக ஆதரவு!

Share it if you like it

பிரபல அமெரிக்க எழுத்தாளர் ரெனீ லின் நடத்திய கருத்து கணிப்பில் பாரதப் பிரதமர் மோடிக்கு பலர் தங்களது அமோக ஆதரவினை வழங்கியிருக்கின்றனர்.

சமூக ஆர்வலர், ஆசிரியர், எழுத்தாளர் என்னும் பன்முகத் தன்மை கொண்டவர் ரெனீ லின். பிறப்பால் நான் அமெரிக்கன் உணர்வால் நான் இந்தியன். உலகத்திற்கே, இந்தியாதான் தாய் நாடு, இந்தியர்களுக்கு நாம் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும் என்று வெளிப்படையாக பேசியவர். இதுதவிர, இந்தியா மற்றும் இந்தியர்களுக்கு எதிராக யாரேனும் கருத்து தெரிவித்தால் உடனே பதிலடி கொடுக்கும் நபராக இருக்க கூடியவர் ரெனீ லீன்.

அந்தவகையில், 2024 அன்று நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாரதப் பிரதமராக மோடி வர வேண்டுமா? அல்லது புதியவர் யாரேனும் வர வேண்டுமா? என தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி இருக்கிறார்.

இதற்கு, 91.4% பேர் மீண்டும் பிரதமராக மோடியே வர வேண்டும் என வாக்களித்து இருக்கின்றனர். வேண்டாம் என 6.4% பேர் வாக்களித்து இருக்கின்றனர். கருத்து கூற விரும்பவில்லை என 2.2% வாக்களித்து இருக்கின்றனர். இந்த கருத்து கணிப்பில் 1,605 பேர் வாக்களித்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it