ஸ்டார்ட் மியூசிக்: எதிர்க்கட்சிகள் அலறல்…  பொதுசிவில் சட்ட மசோதா தாக்கல்!

ஸ்டார்ட் மியூசிக்: எதிர்க்கட்சிகள் அலறல்… பொதுசிவில் சட்ட மசோதா தாக்கல்!

Share it if you like it

மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவாக பொது சிவில் சட்ட மசோதாவை பா.ஜ.க. எம்.பி. கிரோடி லால் மீனா தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 370-வது சட்ட பிரிவை நீக்குவோம். ராமர் கோவில் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை காண்போம். பொதுசிவில் சட்டத்தை கொண்டு வருவோம் என கடந்த 2019 – ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வாக்குறுதி வழங்கியிருந்தது. இதையடுத்து, இரண்டாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்ற பின்பு 370-வது சட்ட பிரிவு அதிரடியாக நீக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ராமர் கோவில் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், தனது பார்வையை பொது சிவில் சட்டத்தின் பக்கம் மோடி அரசு திருப்பியுள்ளது.

இதனிடையே, மாநிலங்களவையில் பொது சிவில் சட்டத்தை தனிநபர் மசோதாவாக பா.ஜ.க. எம்.பி. கிரோடி லால் மீனா தாக்கல் செய்தார். இந்த, மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் அடிப்படையை இது அழித்து விடும் என்று கூறி கோஷம் எழுப்பினர். இதையடுத்து, சபாநாயகர் ஜக்தீப் தங்கர், மசோதாவை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளலாமா? என வாக்கெடுப்பு நடத்தினார். இதற்கு, 63 பேர் ஆதரவாகவும் 23 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதையடுத்து, மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பொது சிவில் சட்டத்தை நிச்சயம் கொண்டு வருவோம் என குஜராத் தேர்தலில் பா.ஜ.க. உறுதியளித்திருந்தது. இந்த நிலையில், வெற்றி பெற்ற அடுத்த நாளே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it