பாரதப் பிரமதர் மோடியை இந்திய மக்கள் ஏற்றுக் கொண்டனர். தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் கலாட்டா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. உடன் தி.மு.க. கூட்டணி வைத்து இருந்தது. அப்போது, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாதிக்கப்படார்களா? அ.தி.மு.க.வும் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து இருந்தது. அப்போது, தமிழ் சிறுபான்மை மக்களுக்கு பாதகம் ஏற்பட்டதா? அப்படி, பாதகம் ஏற்படாத போது பா.ஜ.க. நேரடியாக ஆட்சிக்கு வந்தால் பாதகம் ஏற்பட்டு விடும் என்ற நிலையை உருவாக்க பார்க்கிறார்கள்.
அண்மையில், நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் 155 இடங்களில் பா.ஜ.க. மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, இஸ்லாமியர்கள் அதிகம் வாழ கூடிய 30 தொகுதிகளில் பா.ஜ.க. 23 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளில் இம்முறை பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.