பாரதப் பிரதமர் மோடிக்கு மூத்த அரசியல்வாதி பழ.நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே மேற்பார்வையில், விடுதலை புலிகள் மீது கடந்த 2009 ஆம் ஆண்டு போர் நடத்தப்பட்டன. ராணுவம் நடத்திய மிருகத்தனமான தாக்குதலில் இலங்கை வாழ் அப்பாவி தமிழர்கள் லட்ச கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த இனப்படுகொலைக்கு பின்னால் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் இலங்கைக்கு பெரும் ஆதரவு வழங்கி இருந்தது. அந்த வகையில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம், சென்னை தி.நகரில் நேற்றைய தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பழ.நெடுமாறன், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பா.ம.க வழக்கறிஞர் பாலு, இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம், திருச்சி வேலுச்சாமி, கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு தலைவர்கள் பேசிய பின்பு பழ. நெடுமாறன் பேசியதாவது;
இலங்கை பிரச்சனை சர்வதேச பிரச்னையாக மாறியுள்ளது. அந்நாட்டில், தற்பொழுது சீனா ஆழமாகக் காலூன்றி உள்ளது. இது இந்தியாவிற்கு பெரும் ஆபத்து. பா.ஜ.க தலைவர் இது தொடர்பாகத் தெளிவாகவும் ஆழமாகவும், பேசியுள்ளார். இது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி அண்ணாமலை இருக்கிறார். பிரதமர் மோடி ராஜதந்திரம் மிக்க தலைவராக உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பாரதப் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய பழ.நெடுமாறனை தி.மு.க, வி.சி.க, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தம்பிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுந்தரவள்ளி போன்றவர்கள் மிக கடுமையான வினர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.