முந்தைய காங்கிரஸ் அரசு ஆட்சி காலத்தில், வங்கியில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டில் அடைக்கலம் புகுந்துள்ளவர்களின் சொத்துக்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றம்.
இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர், வங்கிகளில் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஒடினர். இவர்களின் மோசடியால் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.22,585.83 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மோசடி செய்தவர்களின் விவகாரத்தில் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சிக்கு சொந்தமான ரூ.22,585,83 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கதுறை முடக்கியிருந்துது. இது, வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பில் 80.45 சதவீதம் ஆகும். இவற்றில் ரூ.9,371 கோடி மதிப்புள்ள சொத்துக்களை, மோசடியால் பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கு அமலாக்கத்துறை மாற்றி உத்தரவிட்டு இருந்தது.
சில நாட்களுக்கு முன், மும்பை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், குற்றவாளிகளின் சொத்துகளில் ரூ.6,600 கோடி மதிப்புள்ள பங்குகளை வங்கிகளுக்கு அமலாக்கத்துறை மாற்றியது. அப்பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் வங்கிகளுக்கு ரூ.1,357 கோடி கிடைத்தது. அமலாக்கத்துறை முடக்கி உள்ள சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலமாக வங்கிகளுக்கு, விரைவில் ரூ.7981.5 கோடி வருமானம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.