மக்கள் மனநிலை: இந்தியா டுடேவின் கருத்துக்கணிப்பு!

மக்கள் மனநிலை: இந்தியா டுடேவின் கருத்துக்கணிப்பு!

Share it if you like it

இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என பிரபல ஆங்கில ஊடகம் மக்களிடம் கருத்து கணிப்பினை நடத்தி அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டு இருக்கிறது.

பா.ஜ.க.வின் மூத்த தலைவராக இருப்பவர் மோடி. இவர், கடந்த 2014 -ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், நாட்டு மக்களின் அமோக ஆதரவினை பெற்று பிரதமராக ஆனவர். அண்டை நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை இந்தியாவை கேலி, கிண்டல் செய்யும் வகையில் நாட்டை காங்கிரஸ் விட்டு சென்றது. இதையடுத்து, தனது கடின உழைப்பின் மூலம் ஒட்டு மொத்த உலகத்தையும் இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்தவர் பாரதப் பிரதமர் மோடி. வல்லரசு நாடுகள் வளர்ந்து வரும் நாடுகள் வரை இந்தியாவின் கருத்தை கேட்ட பின்பு அடுத்த முடிவுகளை எடுக்கலாம் என்ற நிலைக்கு நாட்டை உயர்த்தியவர் பிரதமர் மோடி.

ரஷ்யா – உக்ரைன் இடையில் நடைபெற்று வரும் போரை பிரதமர் மோடியால் தான் தடுத்து நிறுத்த முடியும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் அண்மையில் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து, போப் பிரான்சிஸ், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் மற்றும் பிரதமர் மோடி உட்பட 3 உலக தலைவர்களை கொண்ட உலகளாவிய அமைதி ஆணையத்தை உடனே தொடங்க வேண்டும். மூன்று பேர் கொண்ட இக்குழு உலகில் போர் நடைபெறாத வண்ணம் அமைதியை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தை மெக்சிகோ அதிபர் வெளிப்படுத்தி இருந்தார்.

இப்படியாக, இந்தியாவின் நற்பெயர் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இதற்கு, பாரதப் பிரதமர் மோடியின் கடின உழைப்பு உள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இப்படிப்பட்ட சூழலில், பிரபல அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான ராஜ்தீப் சர்தேசாய் மக்கள் மனநிலை என்னும் தலைப்பில் யார் அடுத்த பிரதமர்? என்ற கருத்து கணிப்பினை நாடு முழுவதும் பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடே மூலம் நடத்தி இருக்கிறார். இதில், 53% சதவீதம் மக்கள் மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்து இருக்கின்றனர். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 9% சதவீதமும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7% சதவீதம் பேர் வர வேண்டும் என தங்களது விருப்பத்தினை தெரிவித்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it