பாரதப் பிரதமர் மோடிக்கு அமைத்திக்கான நோபர் பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் உச்சத்தில் இருந்து வருகிறது. இருநாடுகளிடையே அமைதியை ஏற்படுத்த வேண்டும் என உலக நாடுகள் கேட்டு கொண்டன. எனினும், இரு நாடுகள் தீவிரமாக போர் செய்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், பாரதப் பிரதமர் மோடி நினைத்தால் போரை உடனே முடிவுக்கு கொண்டு வர முடியும் என உலக நாடுகள் இந்தியாவிடம் முறையிட்டன.
அந்தவகையில், இரு நாட்டு அதிபர்களிடமும் போரை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், பாரதப் பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கு தகுதியானவர் என நோபல் பரிசுக்குழுவின் துணைதலைவர் ஆஷ்லே டோஜே தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளராக பிரதமர் மோடி உள்ளார். உலக நாடுகள் இந்தியாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அமைதியின் தூதராக பிரதமர் மோடி உதிர்த்த வார்த்தைகளை சுட்டிக்காட்டிய அவர், பிரதமர் மோடியின் கொள்கைகளால் இந்தியா பணக்கார நாடாக மாறி வருவதாக புகழாரம் சூட்டியுள்ளார். தன்னை மோடியின் மிக பெரிய ரசிகராக அவர் அறிமுகப்படுத்தி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.