தமிழ்நாட்டை விட குஜராத் சூப்பர்: சன் டிவி.யை பங்கம் செய்த தமிழர்கள்!

தமிழ்நாட்டை விட குஜராத் சூப்பர்: சன் டிவி.யை பங்கம் செய்த தமிழர்கள்!

Share it if you like it

குஜராத் வாழ் தமிழர்கள் தமிழகத்தை காட்டிலும் நாங்கள் ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பாரதப் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத். அந்த வகையில், பா.ஜ.க.வின் கோட்டையாக இந்த மாநிலம் இருந்து வருகிறது. இந்த நிலையில், டிச., 1 மற்றும் டிச., 5 என இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி, நேற்றைய தினம் முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது.

இதையடுத்து, இரண்டாம் கட்ட தேர்தலையொட்டி பாரதப் பிரதமர் மோடி குஜராத்தில் தீவிர சுற்று பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், குஜராத் சட்டமன்ற தேர்தல் குறித்து கள ஆய்வு செய்ய சன். நியூஸ் குழு அம்மாநிலத்திற்கு சென்றுள்ளது.

அந்த வகையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு அக்குழு சென்று யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கருத்து கேட்டுள்ளது. அதில், பெரும்பாலான தமிழர்கள் இந்த முறையும் நாங்கள் மோடிக்கே வாக்களிப்போம். தமிழகத்தை விட குஜராத்தில் நாங்கள் பாதுகாப்பாக உள்ளோம் என தெரிவித்துள்ளனர். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தை மட்டம் தட்டும் நோக்கில் சென்ற சன்.நியூஸ் குழுவிற்கு அம்மாநிலத்தை சேர்ந்த தமிழர்கள் தரமான சம்பவம் செய்து அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it