எதிர்வரும் 2024 – ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாரதப் பிரமதர் மோடி தமிழகத்தில் போட்டியிட போவதாக பிரபல பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டு இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், பாரதப் பிரதமராக இருப்பவர் மோடி. இவர், கடந்த 2014- ஆம் ஆண்டு உ.பி. மாநிலத்தில் உள்ள வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் பேட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, அந்த கட்சி பெரும்பான்மையை பெற்றது. இதனை தொடர்ந்து, பாரதப் பிரதமராக அவர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, இரண்டாவது முறையாக அவர் பாரதப் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், எதிர்வரும் 2024 – ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் இப்போதிலிருந்தே களைகட்ட துவங்கியுள்ளது. அந்தவகையில், உதிரி கட்சிகள், சில்லறை கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை அரசியல் வேலைகளை துவக்கி விட்டன. இப்படிப்பட்ட சூழலில், பாரதப் பிரமதர் மோடி மூன்றாவது முறையாக உ.பி.யில் உள்ள வாரணாசி தொகுயில் போட்டியிடுவார் என்று சொல்லப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தான், அவர் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட போவதாக பிரபல பத்திரிகையான சன்டே கார்ட்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
https://www.sundayguardianlive.com/news/pm-modis-political-magic-will-continue