பாரதப் பிரதமர் மோடியிடம் அமெரிக்க பாடகி காலில் விழுந்து ஆசி வாங்கிய சம்பவம் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
கடந்த மாதம் ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்ளும் விதமாக பாரதப் பிரதமர் மோடி பப்புவா நியூ கினியா நாட்டிற்கு சென்று இருந்தார். அப்போது, அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மாரப் விமான நிலையத்திற்கு நேரில் சென்று பாரதப் பிரதமர் மோடியை வரவேற்றார். இதையடுத்து, ஜேம்ஸ் மாரப் பாரதப் பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி வாங்கினார். இச்சம்பவம் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தி இருந்தது. இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வகையில், மூன்று நாள் அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி சென்று இருக்கிறார். அந்த வகையில், பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அமெரிக்காவின் புகழ் பெற்ற பாடகி மேரி மில்பென் கலந்து கொண்டு பாடினார். இதனிடையே, பிரதமர் மோடியின் காலில் விழுந்து மில்பென் ஆசி வாங்கி இருக்கிறார். இச்சம்பவம், மீண்டும் உலக நாடுகள் மத்தியில் பெரும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.