பாரதப் பிரதமர் மோடி திறந்து வைத்த தேசிய சின்னத்தின் புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியா இழந்த நிலப்பகுதிகள் மற்றும் உரிமைகள் ஏராளம். அதேபோல, எங்கி பார்க்கினும் ஊழல், லஞ்சம். இதன்காரணமாக, பாரத தேசத்தை அயல் நாடுகள் எள்ளி நகையாடும் வகையில் காங்கிரஸ் உருவாக்கி வைத்து இருந்தது. அந்தவகையில், உலகம் முழுவதும் பாரத தேசத்தின் நற்பெயர் பெரும் கேள்விக்குறியாக மாறி இருந்தது. 2ஜி ஊழல், ஆதர்ஸ் ஊழல் என அடுக்கடுக்கான ஊழல் புகார்களே இதற்கு சிறந்த உதாரணம் என்பதே கசப்பான உண்மை.
அந்த வகையில், கடந்த 2014 – ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்தியாவின் தலையெழுத்தே முற்றிலும் மாற துவங்கியது. இதனை தொடர்ந்து, உள்நாட்டு உற்பத்தி, அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி, பொருளாதார வளர்ச்சி, அந்நிய முதலீடுகள் ஈர்ப்பு மற்றும் இந்திய ராணுவத்தில் பல அதிரடி மாற்றங்கள் என ராக்கெட் வேகத்தில் இந்தியா முன்னேறி வருகிறது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த இது பழைய இந்தியா அல்ல. உலகத்திற்கே, இன்று வழிகாட்டும் புதிய இந்தியா என பாரதப் பிரதமர் மோடி தொடர்ந்து நிருபித்து வருகிறார். அந்த வகையில், இரவு பகல் என்று பாராமல் நாட்டின் வளர்ச்சியே தனது கொள்கை என அரும்பாடுபட்டு வருகிறார் பாரதப் பிரதமர் மோடி.
இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் தற்பொழுது புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது. வெகு விரைவில் அந்த பணிகள் பூர்த்தியாகும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் மைய மண்டபத்தின் மேற்கூரையில் தேசிய நினைவு சின்னத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
இதில், சிறப்பு அம்சம் என்னவென்றால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திறந்து வைக்கப்பட்ட தேசிய சின்னம் பூனை போல காட்சியளிக்கிறது. அதே சமயத்தில், மோடி ஆட்சி காலத்தில் திறந்து வைக்கப்பட்ட தேசிய சின்னம் கம்பீரமாகவும் கர்ஜனை செய்வது போலவும் காட்சி அளிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் பூனையாக இருந்த தேசிய சின்னம் இன்று உலக தலைவர் மோடியால் நிஜமான சிங்கமாக மாறி இருக்கிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.