உலகின் ‘நம்பர் 1’ பவர்ஃபுல் தலைவர் மோடி!

உலகின் ‘நம்பர் 1’ பவர்ஃபுல் தலைவர் மோடி!

Share it if you like it

உலகின் மிகவும் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பாரத பிரதமர் மோடி முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

அமெரிக்காவை தலையிடமாகக் கொண்டு செயல்படும் ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற பொலிட்டிக்கல் இன்டலிஜென்ஸ் அமைப்பு உலகளாவிய தலைவர்களில் பிரபலமானவர் யார் என்பது குறித்த ஆய்வை நடத்தியது. இதற்காக, மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 13 நாடுகளின் தலைவர்களை தேர்ந்தெடுத்து இந்த ஆய்வை மேற்கொண்டது. ஒவ்வொரு நாட்டிலும் வயது, பாலினம், பிராந்தியம் மற்றும் கல்வி முறிவுகள், சில நாடுகளில் அதிகாரப்பூர்வ அரசாங்க ஆதாரங்களின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்புகள் எடைபோடப்பட்டன. இந்த ஆய்வு முடிவை அந்நிறுவனம் நேற்று (மார்ச் 18) வெளியிட்டது. இதில்தான், பாரத பிரதமர் நரேந்திர மோடி 77% ஒப்புதல் பெற்று முதலிடம் பிடித்திருக்கிறார்.

மெக்சிகோவின் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் 63 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்திலும், இத்தாலியின் மரியோ டிராகி 54 சதவிகிதம் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறார். ஜப்பானின் ஃபுமியோ கிஷிடா 45 சதவிகித 5-வது இடத்தை பிடித்திருக்கிறார். ஜனவரி 2020 முதல் மார்ச் 2022-ம் ஆண்டு வரையிலான பெரும்பாலான மாதங்களில், பாரத பிரதமர் மோடிதான் மிகவும் பிரபலமான உலகளாவிய தலைவராக இருந்ததாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மேலும், கடந்த 2 ஆண்டுகளில், 2020 மே 2-ம் தேதியன்று பிரதமர் மோடியின் ஒப்புதல் மதிப்பீடு அதிகபட்சமாக 84 சதவிகிதத்தைத் தொட்டது. அதேசமயம், 2021 மே 7-ம் தேதியன்று அவரது ஒப்புதல் மதிப்பீடு மிகக் குறைவாகவே இருந்தது. கொரோனா வைரஸ் 2-வது அலையின்போது 63 சதவிகிதமாக இருந்தது. எனினும், மற்ற உலகத் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் பிரதமர் மோடியின் ஒப்புதல் மதிப்பீடுகள் ஒப்பீட்டளவில் அதிகமாகவே இருந்தன.

அதேசமயம், கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் முறையே 42% மற்றும் 41% ஒப்புதல் மதிப்பீடு பெற்று முறையே 6-வது மற்றும் 7-வது இடத்தில் உள்ளனர். ஆனால், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெறும் 33% ஒப்புதல் மதிப்பீடு பெற்று கணக்கெடுக்கப்பட்ட 13 தலைவர்களில் கடைசியாக இருக்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஒப்புதல் மதிப்பீடுகள் கணிசமான அளவிலேயே இருந்தது. ஆனால், கொரோனா இறப்புகள் அதிகரிப்பு, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் போன்ற காரணங்களால் பைடனின் புகழ் குறைந்து விட்டது. அதேபோல, உக்ரைனில் அமெரிக்க ஆதரவு நெருக்கடியாலும் பைடனின் செல்வாக்கு குறைந்து விட்டது. இது மேலும் குறையும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.


Share it if you like it

One thought on “உலகின் ‘நம்பர் 1’ பவர்ஃபுல் தலைவர் மோடி!

Comments are closed.