பாரதப் பிரதமர் மோடியை மிக கடுமையாக எதிர்த்து வந்த தெலுங்கானா முதல்வர் தற்போது அவரிடம் சரண்டர் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா முதல்வராக இருப்பவர் சந்திர சேகர் ராவ். இவர், மத்திய அரசையும், பாரதப் பிரதமர் மோடியையும் மிக கடுமையாக சாடி வருவதையே வழக்கமாக கொண்டவர். பிரதமரை எதிர்ப்பதையே தனது முழு நேர தொழிலாக கொண்டவர். அந்தவகையில், `தெலங்கானா ராஷ்டிர சமிதி எனும் தனது கட்சியின் பெயரை, ’பாரதிய ராஷ்டிரிய சமிதி’ என்று அண்மையில் பெயர் மாற்றம் செய்தார். பா.ஜ.க.வை எதிர்க்கும் பொருட்டு மாநில கட்சியாக இருந்த தனது கட்சியை தேசிய கட்சியாக மாற்றி இருக்கிறார் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.
பிரதமர் மோடியை எதிர்க்கும் பொருட்டு, பா.ஜ.க. அல்லாத முதல்வர்களை சந்திர சேகர்ராவ் சந்தித்து வருகிறார். இதுதவிர, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத பலமான கூட்டணியை அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் தான், அண்மையில் பத்திரிகையாளர்களை ராவ் சந்தித்து இருக்கிறார். அப்போது, பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்து இருக்கிறேன். அவர், எனது நெருங்கிய நண்பர் என கூறியுள்ளார்.
பா.ஜ.க.வை வீழ்த்துவேன். மோடியை வீழ்த்துவேன் என ஊர் முழுக்க தம்பட்டம் அடித்து வந்த தெலுங்கானா முதல்வர் இப்போது மோடியிடம் சரண்டர் ஆகியிருப்பது ஏன்? என அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.