பாரதப் பிதரமர் மோடி மரணம் அடைவார் என மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு கடந்த இரண்டு நாட்களாக நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்து வருகிறார். மத்திய அரசு ராகுல் காந்தியை பழிவாங்குவதாக கூறி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் மற்றும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லியில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தவகையில், அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு முன்பு கடந்த ஜூன் 13 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷேக் உசேன், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்தார். அவர், நாயை போல இறப்பார் என்று ஆணவத்துடன் பேசியுள்ளார். இதுதவிர, அமலாக்கத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளை தாம் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்துள்ளார். இவரின், கருத்து பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, பல தரப்பிலுமிருந்து கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன. .
இதனை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ஷேக் உசேன் மீது மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தலைவர்கள் கிட்டிகாடன் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், அவரை 48 மணி நேரத்திற்குள் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் எங்களது போராட்டம் தீவிரமடையும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.