மாதம் தோறும் கடைசி ஞாயிறு அன்று பாரதப் பிரதமர் மோடி மனதின் குரல் என்னும் நிகழ்ச்சி மூலம் வானொலியில் உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில், சென்னையை சேர்ந்த சமூக சேவகரை பிரதமர் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதப் பிரதமர் மோடி மனதின் குரல் (மன்கீ பாத்) என்னும் நிகழ்ச்சியின் மூலம் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களிடம் உரையாற்றுவதை வழக்கமாக கொண்டு உள்ளார். தேசத்திற்கும், சமூகத்திற்கும், தங்களால் இயன்ற சேவைகளை செய்து வரும் மேன்மக்களை அடையாளம் கண்டு உலகம் அறிய செய்வதை நோக்கமாக கொண்டவர் பாரதப் பிரதமர் மோடி. அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி என்பவர், தனது பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளை சுத்தம் செய்யும் பணியையும், பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறார். மேலும், இவர் 150-க்கும் மேற்பட்ட ஏரி குளங்களை தூய்மைப்படுத்தியுள்ளார். இவரின் இந்த பணியை தான் பாரதப் பிரதமர் மோடி வெகுவாக பாராட்டியுள்ளார்.
பிரதமர் பேசிய ஆடியோ லிங்க் இதோ.
தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும் மாறா அன்பு கொண்டவர் பாரதப் பிரதமர் மோடி. வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழர்களின் பெருமைகள் குறித்து இன்று வரை பேசி வருகிறார். இதே மன்கீ பாத் நிகழ்ச்சியில், சாதனை படைத்த தமிழர்களின் பெருமைகளை நாட்டு மக்களுக்கு தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார். அந்த வகையில், மதுரையை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி மோகன், நாமக்கல் மாணவி கனிகா மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தாயம்மாள் என பலரின் அரும் பணியை உலகம் அறிய செய்தவர் பாரதப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.