மோடி கிறிஸ்தவ மக்களின் எதிரி கிடையாது: உண்மையை பேசிய பிஷப்!

மோடி கிறிஸ்தவ மக்களின் எதிரி கிடையாது: உண்மையை பேசிய பிஷப்!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி கிறிஸ்தவ மக்களுக்கு எதிரானவர் அல்ல என கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிறுபான்மை மக்களுக்கு எதிரான கட்சி பா.ஜ.க என்று தி.மு.க, ம.தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இதுதவிர, அதே பொய்யை இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியும் பரப்பி வருகிறது. இந்திய மக்களின் நலன் கருதி இரவு பகல் என்று பார்க்காமல் உழைத்து வருபவர் பாரதப் பிரதமர். இவரின், கடின உழைப்பின் மூலம் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக, தமிழக மக்களிடம் பா.ஜ.க மீது நம்பிக்கை ஏற்பட துவங்கியுள்ளது.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல், வி.சி.க தலைவர் திருமாவளவன் ஓவர் டைம் (ஓ.டி) எடுத்து கொண்டு பிரதமருக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பிரச்சாரங்களை இன்று வரை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, கிறிஸ்தவ மக்களின் மனங்களில் பா.ஜ.க குறித்து விஷ கருத்துக்களை திணித்து வருகிறார் என்பதே நிதர்சனம். மோடி வெறுப்பை திட்டமிட்டே தமிழகத்தில் நாங்கள் கட்டமைத்தோம் என திருமாவளவன் முன்பு ஒருமுறை பேசிய காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.

இதுதவிர, தமிழகத்தில் உள்ள பிரபலமான ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் நெறியாளர்கள் கிறிஸ்தவ மக்களின் எதிரியாக பா.ஜ.க.வை சித்தரிக்க முயல்கிறன. இதற்கு, மோகன் சி லாசரஸ், எஸ்றா. சற்குணம் மற்றும் ஜெகத் கஸ்பர் போன்ற தி.மு.க ஆசி பெற்ற பாதிரியார்களும் ஒத்து ஊதி வருகின்றனர்.

இந்த நிலையில் தான், பாரதப் பிரதமர் மோடி கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக செயல்படவில்லை என பிஷப் ஒருவர் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது. பிரதமர் குறித்து அவதூறு பரப்பும் திருமாவளன் போன்றவர்களுக்கு இது சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக இக்காணொளி அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இக்காணொளியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது


Share it if you like it