நானும் இயேசுவும் ஒன்றாக படித்தோம். ஒன்றாக பரிட்சை எழுதினோம் என்று கிறிஸ்தவ மதபோதகர் பேசிய காணொளி பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
கிறிஸ்தவ மக்களின் மத்தியில் நன்கு அறிமுகமானவர் மோகன் சி லாசரஸ். இவர், ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகளை மிக கடுமையாக விமர்சனம் செய்ய கூடியவர். அதேவேளையில், ஏசு மட்டுமே மெய்யான தெய்வம் அவரை மட்டுமே வணங்க வேண்டும் என்று பேச கூட்டியவர். அடுத்தவர்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்தி தமது மதத்தை உயர்த்தி பேசுபவர்கள் ஒரு மனநோயாளி என்பதை அனைவரும் நன்கு அறிவர். இருப்பினும், இவர் தனது போக்கினை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தி வருகிறார். இவர், மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பல்வேறு ஹிந்து அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளன. சிறுபான்மையினரின் வாக்கு வங்கி பாதிக்கப்பட்டு விடும் என்ற ஒற்றை நோக்கத்தில் இவர் மீது எந்தவிதமான நடவடிக்கையையும் மேற்கொள்ள விடியல் அரசு இன்று வரை தயக்கம் காட்டி வருகிறது.
மோகன் சி லாசரஸின் பேச்சு சில நேரங்களில் கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளையும், காயப்படுத்தும் நோக்கில் அமைந்து விடுவதும் உண்டு. கொரோனா தொற்று தமிழகத்தை உலுக்கிய சமயத்தில், பலர் அடுத்த வேளை சோற்றிற்கு என்ன? செய்வது என்று கலங்கி நின்றனர். தமது எதிர்காலம் எப்படி? இருக்கும் என்று பீதியில் உறைந்து போய் இருந்தனர். இப்படிப்பட்ட சூழலில் தான், தேவனுக்கு செலுத்த வேண்டிய தசமபாகத்தை சரியாக செலுத்தாவிட்டால், நீ ஒரு திருடன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டு இருந்தார். இவரின், பதிவு கிறிஸ்தவ மக்களிடம் கடும் கோவத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து, கமுக்கமாக தனது பதிவினை நீக்கி இருந்தார்.
இதனை தொடர்ந்து, விக்கிரக ஆராதனை வழிபடும் இடங்களில் அதிக விபச்சாரம் நடைபெறுகிறது என்று குறிப்பிட்டு இருந்தார். இவரின், கருத்து கிறிஸ்தவத்தில் உருவ வழிபாட்டை பின்பற்றும் மக்களிடையே கடும் கொந்தளிப்பையும், கோவத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
இப்படிப்பட்ட சூழலில் தான், மோகன் சி லாசரஸ் பேசிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இக்காணொளியில் அவர் இவ்வாறு பேசினார் ; பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் வகுப்பிலேயே முதல் மாணவன் நான். எப்படி என்று கேட்டால். ஏசுவும் நானும் ஒன்றாக படித்தோம். ஏசுவும் நானும் ஒன்றாக பரிட்சை எழுதினோம். ஏசுவும் நானும் ஒன்றாகவே பள்ளிக்கு சென்றோம் என்று தெரிவித்து இருக்கிறார். இந்த காணொளியை பார்த்து விட்டு இவரை இன்னுமா? இந்த உலகம் நம்புகிறது என்று நெட்டிசன்கள் பசுமையான வார்த்தைகளால் வாழ்த்தி வருகின்றனர்.