ஏசுவின் பெயரில் ஒட்டு மொத்த இந்தியாவையும் மதமாற்றும் விதமாக ஜெபம் செய்த கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ்க்கு நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு அனைத்து தரப்பு மதங்களையும் சேர்ந்த மக்கள் இங்கு சகோதரத்துவத்துடன் இங்கு வாழ்ந்து வருகின்றனர். அதேவேளையில், அவர்களது மதவழிபாட்டுமுறைகளையும் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். ஆனால், மோகன் சி லாசரஸ் போன்ற மதபோதகர்கள் கிறிஸ்தவர்களை மட்டுமின்றி மாற்று மதத்தை சேர்ந்தவர்களின் உணர்வுகளையும் தொடர்ந்து புண்படுத்தி வருகின்றார். அந்த வகையில், விக்ரக ஆராதனை விபச்சார பாவம் அது தேவனின் கோவத்தை கொண்டு வரும் என்று பைபிள் சொல்வதாக தெரிவித்து இருந்தார்.
மோகன் சி லாசரஸின் கருத்து, ஹிந்துக்கள் மட்டுமின்றி ஏசுவின் விக்ரகத்தை வழிபாடும் கிறிஸ்தவர்களின் மத்தியிலும் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இதனிடையே, கொரோனா தொற்று தமிழகத்தில் தீவிரமாக பரவி இருந்த நேரத்தில், தேவனுக்கு செலுத்த வேண்டிய தசமபாகத்தை சரியாக செலுத்தாவிட்டால், நீ ஒரு திருடன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். கிறிஸ்தவ மக்களின் கடும் எதிர்ப்புக்கு பின்பு தமது பதிவினை நீக்கி இருந்தார்.
இப்படியாக, கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் பேச்சும் செயல்பாடுகளும் இருந்து வருகின்றன. இந்த நிலையில் தான், ஏசுவின் பெயரில் ஒட்டு மொத்த இந்தியாவையும் மதமாற்றும் விதமாக ஜெபம் செய்த கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸின் செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. தற்போது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் இதோ