கிறிஸ்தவ சபைக்கு ஆயிரம் ஆத்மாக்களை எப்படி கொண்டு வர வேண்டும் என்று மதபோதகர் மோகன் சி லாசரஸ் ஆலோசனை வழங்கியக காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
கிறிஸ்தவ மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவரும், மதபோதகருமான மோகன் சி லாசரஸ். ஹிந்துக்களின் வழிபாட்டு முறை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றின் மேன்மையை இழிவுப்படுத்துவதும், அவமதிப்பதையும் நோக்கமாக கொண்டவர்.
கொரோனா தொற்று தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடி வந்த சமயத்தில். தேவனுக்கு செலுத்த வேண்டிய தசமபாகத்தை சரியாக செலுத்தாவிட்டால், நீ ஒரு திருடன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை பதிவு செய்து இருந்தார். ஊரடங்கு காரணமாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த, கிறிஸ்தவர்களின் மத்தியில் மோகன் சி லாசரஸ் பதிவிட்டு இருந்த கருத்து பெரும் அதிர்ச்சியையும், கோவத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
விக்கிரக ஆராதனை வழிபடும் இடங்களில் எல்லாம் அதிக விபச்சாரம் நடைபெறுகிறது என்று கிறிஸ்தவ மக்கள் குழுமிருந்த கூட்டத்தில் இவர் தெரிவித்த கருத்து வேளாங்கண்ணி ஆலயத்திற்கு செல்லும் கிறிஸ்தவ மக்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் கிறிஸ்தவ சபை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய மோகன் சி லாசரஸ் உங்கள் கிறிஸ்தவ சபைக்கு ஆயிரம் ஆத்மாக்களை எப்படி கொண்டு வர வேண்டும் என்று அதாவது., மதம் மாற்றுவது எப்படி என மதபோதகர் மோகன் சி லாசரஸ் பயிற்சி வகுப்பு நடத்திய காணொளி தற்பொழுது வைரலாகி வருகிறது.