கள்ள உறவிற்கு புது விளக்கம் தந்த தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரைக் குழு உறுப்பினர் சுப. வீரபாண்டியனை தனது திரைப்படத்தின் மூலம் பங்கம் செய்துள்ளார் திரைப்பட இயக்குனர் மோகன் ஜீ என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல திரைப்பட இயக்குனர் மோகன் ஜீ. இவர், பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவரது, படங்களில் தேச உணர்வை தூண்டும் வகையிலும், பிரிவினை சக்திகளின் முகத்திரையை கிழிக்கும் வண்ணம் காட்சிகள் இடம் பெற்று இருக்கும். அந்த வகையில், ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வி.சி.க. தலைவர் திருமாவளவன், மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி, மற்றும் கிறிஸ்தவ மிஷநரிகளான எஸ்றா. சற்குணம், மோகன் சி லாசரஸ் போன்றவர்களை வெளுத்து வாங்கி இருப்பார்.
இப்படிப்பட்ட சூழலில், மோகன் ஜீ-யின் அடுத்த படைப்பான ’பகாசுரன் திரைப்படம்’ வெகுவிரைவில் வெள்ளி திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படத்தில், வழக்கம் போல பலரின் முகத்திரையை கிழித்துள்ளார். அந்த வகையில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் நிறுவனரும், கள்ள உறவுக்கு புது விளக்கம் கொடுத்தவருமான, சுப.வீரபாண்டியனின் இழிவான பேச்சை கண்டிக்கும் வகையில் காட்சி அமைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்குது.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரைக் குழு உறுப்பினராக சுப. வீரபாண்டியனை விடியல் முதல்வர் நியமனம் செய்தார் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.