20 வருடங்களுக்குப் பிறகு தாய் மதம் திரும்பிய தம்பதியினரால் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர் கிராம மக்கள்.
சிவ பிரசாத் & கவிதா தேவி தம்பதியினர் 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சனாதன தர்மப் பாதைக்குத் திரும்பினர்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த சிவ பிரசாத் & கவிதா தேவி தம்பதியினர் வேலை தேடி ஃபதேபூர் சென்று அங்கு ஒரு கிராமத்தில் குடியேறினர்.
இருவரும் அமைதி மார்க்கத்தினர் மட்டும் வசிக்கும் கிராமத்தில் குடியேறினர். ஒரு மாதம் சென்ற பிறகு கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர். இந்த கிராமத்தில் வேலை செய்ய வேண்டு மெனில் அமைதி மார்க்கத்திற்கு மாறிட வேண்டும் என்று வற்புறுத்தி மதம் மாற்றியுள்ளனர்.
ஹிந்துவான சிவ பிரசாத் முஸ்லிமாக அப்துல்லாவானார். ஹிந்துவான கவிதா தேவி முஸ்லீமாக ஃபாத்திமாவானார். இவர்களுடைய ஆதார் & ரேஷன் அட்டையில் சிவ பிரசாத்தின் தந்தை பெயர் முஹம்மது ஜாபர் என்று இடம் பெற்றுள்ளது. சிவ பிரசாத்தின் தந்தை பெயர் தேவநாத். கட்டாயப்படுத்தியதால் மதம்மாறியிருந்தாலும் ஆழ்மனதிலிருந்து ஹிந்து சிந்தனை அகன்றிடவில்லை. நீரு பூத்த நெருப்பாக கனல் இருந்து வந்தது.
3 மாதம் முன்பு வீட்டிற்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அப்துல்லா சிவ பிரசாத்தாகவும் ஃபாத்திமா கவிதா தேவியாகவும் மீண்டும் மாறினர். சனாதன தர்மத்தின் படி சிறப்பு ஹோமம் செய்து தாய் மதம் திரும்பினர். இருந்த போதிலும் அதே கிராமத்திலேயே வசித்து வருகின்றனர். அக்கிராமத்திலுள்ள ஒரே ஹிந்து குடும்பம் இவர்கள் குடும்பம் மட்டுமே.
இதே ஃபதேபூரில்தான் மிகப் பெரிய அளவில் மதமாற்றக் கும்பல் செயல்படுவதை போலீசார் கண்டு பிடித்தனர். முஹம்மது உமர் கௌதம் என்பவர் ஹிந்து வாக இருந்து அமைதி மார்க்கத்திற்கு மாறியவர். ஆயிரக்கணக்கான ஹிந்துக்களை அமைதி மார்க்கத்திற்கு மாற்றியுள்ளார். சனாதன தர்மப் பாதைக்கு மீண்டும் திரும்பியுள்ள சிவ பிரசாத் & கவிதா தேவியின் வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல.
தில்லியிலிருந்து ஸ்வராஜ்ய இதழின் மூத்த ஆசிரியர் ஸ்வாதி கோயல் சர்மா அக்கிராமத்திற்கு சென்று கவிதா தேவியை சந்தித்துள்ளார். இதை எதிர் பார்க்காத அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.
சனாதன தர்மப் பாதைக்கு திரும்பியிருந்தாலும் சட்டரீதியாகப் பெயர் மாற்றச் சான்றிதழ் பெறவில்லை. அதை பெற்றுத் தந்திட ஃபதேபூரில் வசிக்கும் வழக்கறிஞர் ஒருவரின் உதவியும் எற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.