ஆதி புருஷ் திரைப்படத்தை காண வந்த குரங்கை கண்டு ஜெய் ஸ்ரீ ராம் என ரசிகர்கள் உற்சாக கோஷம் எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி திரைப் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் பான் இந்தியா நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அந்த வகையில், தற்போது அவர் ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிற `ஆதி புருஷ் படத்தில் ராமர் வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான டி-சீரிஸ் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகிவரும் இப்படத்தை இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். இப்படம் குறித்து, அவர் கூறியதாவது : “‘அதிபுருஷ்’ சாதாரண திரைப்படம் அல்ல, பிரபு ஸ்ரீ ராமர் மீதான பக்தி, நமது கலாசாரம் மற்றும் வரலாறு ஆகிவற்றை அடையாளப்படுத்தும் பணி. அந்த வகையில் இத்திரைப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒரு நல்ல முழுமையான காட்சி அனுபவத்தைத் தர வேண்டும். இதைச் சாத்தியமாக்குவதற்கு எங்களுக்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.
எனவே ‘அதிபுருஷ்’ திரைப்படத்தை அடுத்த ஆண்டு 2023, ஜூன் 16ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். இந்தியா பெருமைப்படும் வகையில் இத்திரைப்படத்தை உருவாக்குவோம். உங்கள் அன்பும் ஆதரவும் எப்போதும் எங்களுக்கு வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆதிபுருஷ்’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படத்தை காண குரங்கு ஒன்று திரையரங்கிற்கு வந்துள்ளது. இதனை, கண்டு ரசிகர்கள் உற்சாக கோஷம் எழுப்பி இருக்கின்றனர். இந்த புகைப்படம் தெலுங்கானாவில் உள்ள திரையரங்கில் ஒன்றில் எடுக்கப்பட்ட படம் என்று சொல்லப்படுகிறது.
