தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்கள் இன்று (ஜூன் 25) பார்லிமென்டில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
அப்போது சில தமிழக எம்.பி.,க்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு ‛ஐஸ்’ வைப்பதற்காக கருணாநிதி வாழ்க ! திராவிடம் வாழ்க ! தளபதி வாழ்க என கோஷமிட்டனர். சில எம்.பி.,க்கள் வாழிய வையகம்! வாழ்க தமிழ்! தலித், ஆதிவாசிகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நிறுத்துக என குறிப்பிட்டனர். சிலர் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தியபடி பதவியேற்றுக்கொண்டனர்.
ஓரிருவர் உதயநிதி வாழ்க எனக் கூறி அவரையும் விட்டு வைக்கவில்லை. கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி கோபிநாத் தெலுங்கு மொழியில் பதவியேற்றார்.
சமூகநீதி பேசும் திமுக கட்சியினர் பதவிக்காக தன்னைவிட வயதில் குறைந்த முதல்வர் ஸ்டாலின் மகனான உதயநிதி பெயரை பெருமையாக சொல்லி பதவி ஏற்கும் நகைச்சுவை எல்லாம் திமுக கட்சி நிர்வாகிகள் பதவி ஏற்கும் நிகழ்வில் அரங்கேறி உள்ளது. அடுத்த தேர்தல் வந்தால் உதயநிதியின் மகன் இன்பநிதி பெயரை கூட திமுக அமைச்சர்கள் பெருமையாக கூறி பதவி ஏற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
திமுக அமைச்சர்கள் பதவி ஏற்கும் இந்த காணொளியினை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து கலாய்த்து வருகின்றனர்.